கடலும் புயலும்
இன்று காலை சன் டிவியில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடிகர் விவேக் நடத்திய நேர்காணலை ஒளிபரப்பினார்கள். அதில் விவேக் ரஹ்மான் பற்றி ஒரு கவிதை சொன்னார். டேனியல் பாயில், ஹாஃப் பாயில் என்று டிபிகல் விவேக் சமாசாரங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் அக்கவிதையில் வந்த ஒரு வரி என்னை மிகக்கவர்ந்தது.
"கடல் ஓரிடத்தில் தான் இருக்கும்; புயல் தான் கரை கடக்கும்."
இளையராஜாவையும் ரஹ்மானையும் ஒப்பிட்டு அவர் சொன்னது அது. அதன் முழு அர்த்தமும் உணர்ந்து தான் அதைச் சொன்னாரா எனத் தெரியாது. ஆனால் மிக அழகான, மிக ஆழமான உவமை. ஆம். கடல் பல விஷயங்களைக் கொண்ட ஆழமான விஷயம்; ஆனால் நிரந்தரமானது. புயல் உடனடியாய் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்; ஆனால் தற்காலிகமனது.
இதைக்கேட்டவுடன் பள்ளியில் ஒரு முறை தமிழாசிரியர் இரவி (தற்போது அவர் பிரபல கவிஞர் - "அகச்சிவப்புக்கதிர்கள்", "கனவுநிலை உரைத்தல்". எழுத்தாளர் சுஜாதா கூட இவரைப் பற்றி தனது 'கற்றதும் பெற்றதும்' தொடரில் எழுதியிருக்கிறார்) இதே விஷயத்தைப்பற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது. அவரிடம் "யார் பெரிய ஆள் - இளையராஜாவா ரஹ்மானா?"என்று கேட்டோம். ஒரு கணம் யோசித்து விட்டு தன் வழக்கமான கம்பீரக்குரலில் சொன்னார்.
"புயல் அழிக்கக்கூடியது; ஞானிகள் உருவாக்கக்கூடியவர்கள்."

Comments
Music is like an Ocean. Ilayaraja himself is an Ocean of Music
ARR idhukulam worry panave maatar.. avar innum heights poite iruparu...
இளையராஜாவின் ஆழம் கம்பீரமானது;கடலானதால் போட்டது போட்டபடியே இருக்கிறது. ரஹ்மான் உழலும் காலத்தில் கடலாக இருந்தால் பிழைக்க முடியாது.
இசைக்கு பொதுவில் இரண்டு பரிமானங்கள் உண்டு. லயிப்பு மற்றும் பிரமிப்பு. ஒப்பீட்டுடன் இதனை விளக்க வேண்டும் என்றால், MSV காலத்தில் லயிப்பு, ராஜா காலத்தில் லயிப்பு - இடையிடையே பிரமிப்பு, ரஹ்மான் காலத்தில் பிரமிப்பு-இடையிடையே லயிப்பு.
இதற்கான காரணம் இசையாள்பவர்கள் மட்டுமல்ல என்பது எனது தாழ்மையான எண்ணம்.
மற்றபடி that that man that that taste.