49-Oவும் சாருவும்

49-O பற்றிய என் பதிவின் சுட்டியை சாரு நிவேதிதாவிற்கு அனுப்பியிருந்தேன். அதற்கு அவரது பதில் இங்கே:

http://charuonline.com/April09/Election-Gnani.html

"இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் யாவரும் (ஒன்றிரண்டு பேர் நீங்கலாக) திருடர்கள்; கொள்ளைக்காரர்கள்; பயங்கரவாதிகள்; கொலைகாரர்கள்; போலீஸை வேலைக்காரர்களாக வைத்திருக்கும் சமூக விரோதிகள். இவர்கள் செய்யாத அயோக்கியத்தனமே இந்த உலகத்தில் எதுவும் கிடையாது. கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, ஃபோர்ஜரி, தேசத்தையே காட்டிக் கொடுத்தல் போன்ற செயல்களே இவர்களின் மூலதனம். பணத்துக்கும் அதிகாரத்துக்கும் எதையும் செய்யத் துணிந்த இவர்கள் அனைவரும் (ஒன்றிரண்டு பேர் நீங்கலாக) தூக்கில் போடப்பட வேண்டியவர்கள்; அல்லது, நடுத்தெருவில் வைத்துக் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். இந்திய தேசத்தில் 75 விழுக்காடு மக்கள் தெருநாய்களைப் போல் வாழ்வதற்கு இந்திய அரசியல்வாதிகள் என்று அறியப்படும் இந்தக் கிரிமினல்களே காரணம்."

இது சாருவின் பதிலிலிருந்து எடுக்கப்பட்டது. இதனோடு அப்படியே ஒத்துப் போகிறேன். அந்த வகையில் பார்த்தால் நானும் ஒரு நக்ஸலைட் தான். அதை எதிர்கொள்ளும் விதத்தில் தான் வேறுபடுகிறோம். அவர் வெறுத்துப் போய்
ஓட்டுப்போடுவதில்லை; நான் ஒரு நப்பாசையில் 49-O போடுகிறேன்.

அவ்வளவு தான் வித்தியாசம்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி