Posts

Showing posts from April, 2009

இப்படித்தான் தொடங்கினோம்

சாரு நிவேதிதாவுக்கு நான் எழுதிய முதல் கடிதமும் அதற்கு அவரது பதிலும்... ############ from c.saravanakarthikeyan@gmail.com to charu.nivedita.india@gmail.com date Mon, Apr 28, 2008 at 2:51 PM subject Let us start if... mailed-by gmail.com Hi Charu, In spite of a bundle of contradictions, I am keeping a pace with you through your novels, Konal Pakkangal and few articles in Uyirmai. The reason for this instant mail lies with New Booklands, T.Nagar where I saw you last weekend. My wife insisted me to talk to you which indeed, I neglected (as you did with writer Sujatha). Anyway, now I am before you with my electronic face - www.writercsk.com I am 23 years old and working as Software Engineer at Bangalore. Let us continue if we really some stuff to talk. -- Saravanakarthikeyan C. ############ from charu.nivedita.india@gmail.com to c.saravanakarthikeyan@gmail.com date Mon, Apr 28, 2008 at 3:08 PM subject Re: Let us start if... mailed-by gmail.com oh i see. i dont remember

தீராத விளையாட்டு

சாருவின் திடலில் மீண்டும்... http://charuonline.com/April09/thavaresponse.html http://charuonline.com/April09/saravana.html http://charuonline.com/April09/modi.html http://charuonline.com/April09/modi1.html

கடிதம்: Oru rasigan

Hi, naan ithu varaikum unnoda entha ezhuthukala patthium karuthu sonnathu illa, kallori natkalla kooda. aana unnoda kadithathuku charu ezhuthina pathil ennoda karutha solla vachuduthu, ithu thaan avaroda balamaa irukkanum!? Naan pesi pazhagina ezhuthaalannu sonnal athu enakku therinja varai nee oruthan thaan. Ezhuthaalaragal suvarasyamaanavargal avargal ezhuthilum vazhvilum. Aanal avargaloda nerungi pazhaguvathu konjam illa rombave kadinamnu nenaikraen. Unnai parkrappo varra bayam oru saatchi. Kaaranam ennava irukkalam? yosichu paartha, enakku thonradhu "Gnanacherukku" nu unnala kuripidapadugira andha gunam thannu nenaikraen. Thannoda karuthila irukkra uruthi, athu illana ezhutha mudiyathu, neraya berukku pidikrathilla. Eanna charu sonna mathiri,ovvorutharum oruvaruku oruvar muranpadave seiraanga. itha eduthukkara pakkuvam podhu makkalukku kuraivu. Intha azhuthamaana unarvu ezhuthalanukku mattume saathiyam. Matravargaluku irundha piraraal othukki thallapadavarae andri pirith

THE MENSTURAL RAPE

Do you think of having intercourse with your wife on her menses? Definitely, I won't. It's not because of the fear and hatredness towards blood; also not because of the sense of hygiene and cleanliness. It's due to the pain that she incubates in body and mind during that 'period'. A couple of weeks ago, in Mumbai, a 23-year NRI girl was gang-raped by six of her friends when she had running periods. When the culprits were caught, they told "We didn't think that she'd cry rape". Horrible! Always, my stand in rape cases is same - If proven, cut-off their... The following is her statement to Mumbai police: ############ COMPLAINANT: NAME WITHHELD RELIGION: HINDU AGE: 23 OCCUPATION: STUDENT I came to India from USA in October 2008 to attend a religious pilgrimage... I am a student of Gender and Development at the TISS, Deonar. I have been in Mumbai to attend the said course since January 2009. After coming to Mumbai, I met Annie Brown, 21, who is als

49-Oவும் சாருவும்

49-O பற்றிய என் பதிவின் சுட்டியை சாரு நிவேதிதாவிற்கு அனுப்பியிருந்தேன். அதற்கு அவரது பதில் இங்கே: http://charuonline.com/April09/Election-Gnani.html " இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் யாவரும் (ஒன்றிரண்டு பேர் நீங்கலாக) திருடர்கள்; கொள்ளைக்காரர்கள்; பயங்கரவாதிகள்; கொலைகாரர்கள்; போலீஸை வேலைக்காரர்களாக வைத்திருக்கும் சமூக விரோதிகள். இவர்கள் செய்யாத அயோக்கியத்தனமே இந்த உலகத்தில் எதுவும் கிடையாது. கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, ஃபோர்ஜரி, தேசத்தையே காட்டிக் கொடுத்தல் போன்ற செயல்களே இவர்களின் மூலதனம். பணத்துக்கும் அதிகாரத்துக்கும் எதையும் செய்யத் துணிந்த இவர்கள் அனைவரும் (ஒன்றிரண்டு பேர் நீங்கலாக) தூக்கில் போடப்பட வேண்டியவர்கள்; அல்லது, நடுத்தெருவில் வைத்துக் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். இந்திய தேசத்தில் 75 விழுக்காடு மக்கள் தெருநாய்களைப் போல் வாழ்வதற்கு இந்திய அரசியல்வாதிகள் என்று அறியப்படும் இந்தக் கிரிமினல்களே காரணம். " இது சாருவின் பதிலிலிருந்து எடுக்கப்பட்டது. இதனோடு அப்படியே ஒத்துப் போகிறேன். அந்த வகையில் பார்த்தால் நானும் ஒரு நக்ஸலைட் தான். அதை எதிர்கொள்ளும

விதிவிலக்குகள் பட்டியல்

2009 லோக்சபா தேர்தலுக்கான தமிழகம் மற்றும் புதுவையின் 40 பாராளுமன்றத் தொகுதிகளின் இதுவரை அறிவிக்கப்பட்ட அனைத்துக் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களை கவனித்ததில் (நேற்று கோலாகலமாய் வெளியிடப்பட்ட விஜய டி. ராஜேந்தரின் லட்சிய திமுக வேட்பாளர் பட்டியல் உட்பட), என் பார்வையில் தகுதியுடையவர்களாய் வெறும் ஏழே பேர் தான் தேறுகிறார்கள்: தொல்.திருமாவளவன் ( விடுதலை சிறுத்தைகள் கட்சி ) - சிதம்பரம் பி.மோகன் ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ) - மதுரை ப.சிதம்பரம் ( இந்திய தேசிய காங்கிரஸ் ) - சிவகங்கை தயாநிதி மாறன் ( திராவிட முன்னேற்ற கழகம் ) - மத்திய சென்னை பி.சிவகாமி ( பகுஜன் சமாஜ் கட்சி ) - கன்னியாகுமரி கே.பாண்டியராஜன் ( தேசிய முற்போக்கு திராவிட‌ர் கழகம் ) - விருதுநகர் இ.சரத்பாபு ( சுயேச்சை வேட்பாளர் ) - தென் சென்னை ஜெயிப்பார்களா என‌த்தெரியாது - ஜெயிக்க‌ வேண்டுமென‌ விரும்புகிறேன்.

சூட்சமச் சுவை

ஒரு முறை மனைவி ஊருக்குப் போயிருந்த போது, என் சினேகிதனை வீட்டுக்கு அழைத்திருந்தேன். இரவு வீட்டில் நாங்களே சமைத்து சாப்பிடலாம் என முடிவு செய்து நூடுல்ஸ், தோசை மாவு, முட்டை போன்ற‌ பேச்சிலர் ஸ்பெஷல் அயிட்டங்களை வாங்கி வந்தோம். அவனுக்கு சமைக்கத் தெரியும்; எனக்கு சாப்பிடத் தெரியும் என்கிற பரஸ்பர புரிதல் எங்க‌ளிடையே இருந்தது. சாப்பிட்டு முடித்த பின் சமையலின் உப்பு-காரம் குறித்த நிறை-குறை (தீய்ந்து போன நூடுல்ஸ் பற்றி, " ச்சே! கொஞ்சம் முன்னாலயே எடுத்திருக்கனும் " என்று திட்டமிடாமல் கர்ப்பமான டீன்-ஏஜ் பெண் மாதிரி புலம்பிக் கொண்டிருந்தான்) மற்றும் வேறு பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டு நள்ளரவு தாண்டி உறங்கச் செல்லும் போது " காஃபி குடிக்கலாம் " என்றான். நான் காஃபி, டீ போன்ற எந்த லாகிரி வஸ்துவையும் அண்டுவதில்லை. வீட்டில் பால் வாங்குவதே என் மனைவிக்காகவும் எப்போதாவது வரும் விருந்தாளிகளுக்காகவும் தான். அவன் எனக்கு அப்படியே நேர் எதிர். அரை மணிக்கு ஒரு முறை காஃபி குடிக்கவேண்டும் - இல்லையெனில் தலை வலிக்கும்; ஒரு மணி நேரமானால் கை நடுங்கும். பிரிட்ஜில் நந்தினி பால் இருந்தது (தவறா

விளம்பரங்கள் கவர்ச்சிகரமானவை

Image
பத்திரிக்கையோ, வானொலியோ, தொலைக்காட்சியோ - ஊடகம் எதுவாயினும் விளம்பரத்தின் நோக்கம் ஒன்று தான். பார்ப்பவரை கவனிக்க வைக்க வேண்டும்; முடிந்தால் யோசிக்க வைக்க வேண்டும் அல்லது யோசிப்பதைத் தடுக்க வேண்டும்; அதன் மூலமாக வியாபாரம் நடக்க வேண்டும். தொலைக்காட்சி விளம்பரங்களில் சில வினாடிகளுக்குள் ஒரு சுவாரசியமான கதை சொல்லி பொருளை விற்க வேண்டும். அவை பொதுவாய் ஒரு திரைக்கதையின் three-act structureஐக் கொண்டிருக்கும்; தவிர எதிர்பாராத ஒரு முடிவைக் கொண்டிருக்கும் - O.Henry அல்லது சுஜாதாவின் சிறுகதை போல. வானொலி விளம்பரங்கள் பெரும்பாலும் slogan rhymingகளை நம்பி இருப்பவை; அதன் creativity scopeம் குறைவு என்பதால் பேசவும் அவ்வளவாய் ஏதுமில்லை. நடிகர் விவேக் எஃப்.எம் விளம்பரங்கள் பற்றி ஏற்கனவே போதுமான அளவு கிண்டலடித்து விட்டார். அதனால் பாவம், விட்டு விடலாம். இவை இரண்டையும் விட சவால் மிகுந்தவை பத்திரிக்கை விளம்பரங்கள். தொலைக்காட்சி விளம்பரங்களில் சொல்லப்படும் அதே கதையை ஒரு புகைப்படம் ம‌ற்றும் சில வார்த்தைகளில் சொல்ல வேண்டும். இதற்கு மிகுந்த கற்பனைத் திறன் தேவை - எடுப்பவருக்கு மட்டுமல்ல; பார்ப்பவருக்கும். PACE என்

இருக்கை யுத்தம்

பெங்களூரிலும் தமிழ்நாடு போல் பேருந்தில் பெண்களுக்கென தனி இட ஒதுக்கீடு உண்டு - அதுவும் கிட்டதட்ட ஐம்பது சதவிகிதம். ஒரு முறை நான் ஏறிய பேருந்தில் பொது இருக்கைகள் அனைத்தும் நிரம்பியிருந்ததால், காலியாயிருந்த சில‌ 'மகளிர் மட்டும்' இருக்கைள் ஒன்றினில் அமர்ந்தேன். அடுத்த நிறுத்தத்தில் கணவன், மனைவி, இரு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பம் அடித்து பிடித்து பதட்டத்துடன் ஏறியது. குழந்தைகள் காலியாயிருந்த வேறு சில பெண்கள் இருக்கையில் அமர்ந்து கொள்ள, அந்தக் கணவன் என்னிடம் வந்து உடைந்த ஆங்கிலத்தில் " This is ladies seat " என்றான். நான் எழுந்து கொள்ள, கணவன் மனைவி இருவரும் அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர். என்னை எழுப்பி விட்டு இவ‌ன் உட்கார்ந்து விட்டானே, ஒரு வேளை வேறு பிரச்சனைகள் ஏதுமிருக்குமோ என சந்தேகத்துடன் குழந்தைகள் முகங்களைப் பார்க்க அவன் சாயலில் தான் இருந்தன. நான் கோபத்துடன் அந்த இருக்கைக்கருகிலேயே நின்று கொண்டேன். அதை அவனும் உணர்ந்திருக்க வேண்டும் - அடுத்த நிறுத்தத்தில் யாரோ ஒரு பெண் இறங்கி விட, காலியான அந்த இருக்கையை எனக்கு காட்டி அமரும் படி சொல்லி புன்னகைத்தான். நான் சாந்தமான ம

இசை ஞானி ஆயிரம் - 5

ஏலேய் எங்க வந்த - மாயக்கண்ணாடி கொஞ்சம் கொஞ்சம் - மாயக்கண்ணாடி உலகிலே அழகி நீ தான் - மாயக்கண்ணாடி குண்டு மல்லி - சொல்ல மறந்த கதை அம்மா சொன்ன - சொல்ல மறந்த கதை ஏதோ ஒண்ணு - சொல்ல மறந்த கதை பாட்டு சொல்லி பாடச் சொல்லி - அழகி டமக்கு டமக்கு டம் - அழகி உன் குத்தமா - அழகி ஒளியிலே தெரிவது - அழகி

தேர்தலும் 49-Oவும்

இன்று இந்த க்ஷணம் இந்தியா முழுக்க 124 பாராளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வாகுப்பதிவு வெற்றிகரமாய் நட‌ந்தேறியிருக்கும். நியாயமாய்ப் பார்த்தால் இப்பதிவு குறைந்தபட்சம் நேற்றே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் தேர்தலில் வாக்களிப்பது பற்றிய ஒரு முக்கிய விஷயம் இது. ஆனாலும் பரவாயில்லை. இது தமிழில் எழுதப்படுவதாலும் த‌மிழ் நாட்டின் தேர்தல் தேதி மே 13 தான் என்பதாலும் இன்னமும் தாமதமாகிவிடவில்லை. ஓட்டுப்போடுவது எந்த இந்தியக் குடிமகனும் தவிர்க்கவே கூடாத ஒரு ஜனநாயகக்கடமை. உதயசூரியன் - இரட்டை இலை விசுவாசிகளுக்கும், குவாட்டர் - கோழி பிரியாணி விசிறிகளுக்கும் பிரச்சனையில்லை; அவர்களின் ஓட்டை வாக்கோ நாக்கோ எளிதாய் தீர்மானித்து விடும். ஆனால் நீங்கள் நல்லவராய் இருந்து, கூடவே கொஞ்சம் யோசிப்பவராகவும் இருந்து விட்டால் பிரச்சனை தான். யாருக்கு ஓட்டு என்ற அடிப்படையான குழப்பம் ஏற்படும். நீங்கள் யோசித்து முடிவு செய்வதற்குள் தேர்தல் முடிந்து விடும். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் அரை மணி நேரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையரையே அதிர்ச்சி அல்லது ஆச்சரியப்படுத்தும் வகையில் பதிவாகும் 30 சதவிகிதம் வாக்குகளில் உங்கள் ஓ

BEST OF FORWARDS - 36

Image

SARKAR கவிதைகள் - 6

மனிதனை மாற்றும் மனதினை ஏமாற்றும் சிலரை கடவுளாக்கும் பலரை மிருகமாக்கும் அதன் பெயர் கேட்டால் ஆங்கிலத்தில் செக்ஸ் அழகுத்தமிழில் காதல்.

SARKAR கவிதைகள் - 5

நீயும் நானும் சந்திக்கும் புள்ளி இக்கவிதை அல்லது உனக்கும் எனக்கும் தூர வித்தியாசம் இக்கவிதை.

SARKAR கவிதைகள் - 4

அம்மையப்பன் முதல் சுற்றம் சூழல் சொந்தம் இடுக்கண் களை நட்பு காதல் மனைவி வரை பைத்தியகாரனென்று அழைக்கப்பட‌ நேரும் அதிஅற்புத‌கணங்கள அடிக்கடி வாய்க்கும் உனக்கும் - நீயொரு சிந்தனையாளனெனில்.

SARKAR கவிதைகள் - 3

மனிதனின் முதல் பாவம் சிந்திக்க‌த் தொடங்கியது அதன் மிகச்சமீப நீட்சி - நீயும் நானும் இக்கவிதையும்.

SARKAR கவிதைகள் - 2

எதுவும் புரியாது என்பது புரிவதே ஞானத்தொடக்கம்.

SARKAR கவிதைகள் - 1

பலவீனம் கவிஞனுக்கு சொல் ஓவியனுக்கு கோடு இசைஞனுக்கு ஓசை எனக்கு ஞானம்.

தொலைக்காட்சிப் பேய்

Image
" யாவரும் நலம் " திரைப்படம் ஆவி போன்ற அமானுஷ்ய சமாச்சாரங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு கதை. யோசித்துப்பார்த்தால் இது போன்ற விஷயங்களில் நம்பிக்கையில்லாதவனான எனக்கு இப்படம் பிடித்திருக்கக் கூடாது. ஆனால் முரண்பாடாய் இப்படம் எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. அது தான் கலையின் வெற்றி - கொள்கைகளைத் தாண்டிய சங்கதி அது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. டைட்டில் கார்டில் தொலைக்காட்சியின் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும் காட்சிகளைக் காட்டும் போதே டிவி தான் படத்தின் பிராதான பாத்திரம் என்பதை உணர்த்தி விடுகிரார்கள். முப்பது வருடங்களுக்கு முன் அகாலமாய் இறந்தவர்களின் ஆவி தொலைக்காட்சிக்குள் நுழைந்து, தம் சாவுக்கு காரணமானவனைப் பழி தீர்ப்பது என்று எழுதினால் முழுக்கதையையும் சொன்னது போலாகி விடும். அதனால் வேண்டாம். எட்டு பேர் கொண்ட மாதவனின் கூட்டுக்குடும்பம் ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்கு குடிபெயர்கிறது. அந்த அப்பார்ட்மெண்ட்டின் 13வது மாடியிலுள்ள 13 எண் கொண்ட அவர்கள் வீட்டில் மட்டும் 13:00 மணிக்கு தொலைக்காட்சியின் 13வது சேனலில் " யாவரும் நலம் " என்கிற நாடகம் ஒளிபரப்பாகிறது. அதில் வரும்

பழையன புகுதலும் - 9

நீயும் நானும் இலக்கணம் மீறிய‌ இரட்டைக்கிளவி. குறிப்பு : 2003ல் ஏதோ ஒரு சந்தோஷ தினத்தில் எழுதியது

கடலும் புயலும்

இன்று காலை சன் டிவியில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடிகர் விவேக் நடத்திய நேர்காணலை ஒளிபரப்பினார்கள். அதில் விவேக் ரஹ்மான் பற்றி ஒரு கவிதை சொன்னார். டேனியல் பாயில், ஹாஃப் பாயில் என்று டிபிகல் விவேக் சமாசாரங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் அக்கவிதையில் வந்த ஒரு வரி என்னை மிகக்கவர்ந்தது. " கடல் ஓரிடத்தில் தான் இருக்கும்; புயல் தான் கரை கடக்கும் ." இளையராஜாவையும் ரஹ்மானையும் ஒப்பிட்டு அவர் சொன்னது அது. அதன் முழு அர்த்தமும் உணர்ந்து தான் அதைச் சொன்னாரா எனத் தெரியாது. ஆனால் மிக அழகான, மிக ஆழமான உவமை. ஆம். கடல் பல விஷயங்களைக் கொண்ட ஆழமான விஷயம்; ஆனால் நிரந்தரமானது. புயல் உடனடியாய் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்; ஆனால் தற்காலிகமனது. இதைக்கேட்டவுடன் பள்ளியில் ஒரு முறை தமிழாசிரியர் இரவி (தற்போது அவர் பிரபல கவிஞர் - " அகச்சிவப்புக்கதிர்கள் ", " க‌னவுநிலை உரைத்தல் ". எழுத்தாளர் சுஜாதா கூட இவரைப் பற்றி தனது ' கற்றதும் பெற்றதும் ' தொடரில் எழுதியிருக்கிறார் ) இதே விஷயத்தைப்பற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது. அவரிடம் " யார் பெரிய ஆள் - இளையராஜாவா ரஹ்மானா? "என்று கேட்ட

பிரிவோம் சந்திப்போம்

ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவர் கடைசியாய்ப் பங்காற்றிய படைப்பு வெளியாகி, அது பற்றி மோசமாய் விமர்சனம் எழுத நேர்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதுவும் அந்த ஒருவர் என் ஆதர்சமான சுஜாதா என்றெண்ணும் போது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆயினும் உணர்ச்சியை விட உண்மை முக்கியம் என்பதால்... எழுத்தாளர் சுஜாதாவின் நாவலான " பிரிவோம் ச‌ந்திப்போம் " A.R.காந்தி கிருஷ்ணாவின் இயக்கத்தில் " ஆனந்த தாண்டவம் " என்கிற திரைப்படம் ஆகியிருக்கிறது. " படம் எப்படியிருக்கிறது? " என்ற கேள்வி என் போன்ற சுஜாதாவின் தீவிர வாசகர்களுக்கு embarrassing ஆன விஷயம் தான். ஆம். படம் பற்றி நேர்மையாய் சொல்ல வேண்டுமெனில் " குப்பை ". எண்பதுகளின் இறுதியில் இரு பாகங்களாய் " பிரிவோம் ச‌ந்திப்போம் " நாவலை ஆனந்த விகடனில் சுஜாதா தொடராய் எழுதிய போது, அது வாசகர் மத்தியில் மிகுந்த புகழ் பெற்றது. சுஜாதா எழுதியதில் பிடித்தது எது எனக் கேட்டால் அவர் வாசகர்களில் தொன்னூறு சதவிகிதம் பேர் " பிரிவோம் ச‌ந்திப்போம் " என்று சொல்லுவார்கள் - அதை ஓரளவுக்கு அவரும் ஏற்றுக் கொண்டார். ஆனால் அ

BEST OF FORWARDS - 35

Image
NB : This is forwarded to me by my beloved wife; hence supposed to be AUTHENTIC ;)

கடிதம்: from mptyvessel

எனது பி.ஜே.பி.யும் நானும் பதிவுக்கு mptyvessel என்பவர் (என்னங்க பேர் இது!) எழுதிய பின்னூட்டதுக்கு எனது பதில் (வழக்கம் போல்) தனிப்பதிவாக. ############ mptyvessel said... Nice post. I have always been proud that I am born in Tamilnadu, where these religious fanaticism have not been allowed as much it is allowed in other states. Thanks to Periyar and his followers(correct me if I am wrong) for bringing in awareness among people... However, the question now is....other parties have been favoring Muslim (through Haj Subsidy and many others)or other minorities just for votes. How do we go about stopping them? Its that we are caught between two extremes...One side, hindutva is dominating and on the other extreme favoritism... Let me know your thoughts on this... Thursday, April 9, 2009 7:44:00 PM IST ############ mptyvessel, அதுவும் தவறு தான். என்னைப் பொறுத்தவரை சாதி மற்றும் மத ரீதியான சலுகைகள் போன்றவற்றை அறவே தவிர்த்து, பொருளாதார ரீதியான ஒதுக்கீடுகள் மட்டும் செய்யப்பட வேண்டும். இதில் மா

வியர்க்கும் உதடுகள்

Image
ஒன்றரை வருடம் முன்பு, குங்குமம் வாசகர் கவிதைத் திருவிழா வில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் முத்திரைக்கவிதை யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது ' ஒருத்தி நினைக்கையிலே ' என்கிற கவிதையில் " பயத்தில் பிரசவிக்கும் உதட்டு வியர்வை " என்று ஒரு வரி வரும். இத்தனை நாட்கள் கழித்து, இன்று ஆர்குட்டில் ஸ்வாதி என்பவர் ( சுப்ரமணியபுரம் படம் நினைவுக்கு வந்து, நிஜப்பெயரா என்று கேட்டால், Yes என்று சொல்லி ஸ்மைலியில் கண்ணடிக்கிறார்) அந்தக்கவிதைக்கு ஓர் எதிர்வினையாற்றி இருக்கிறார் - மிகச் சுவாரசியமான எதிர்வினை. இது நாள் வரை இந்த விஷயம் எனக்குத் தெரியாது; கவிதையைப் படித்த வேறு யாரும் இதை கண்டுபிடிக்கவில்லை (அல்லது என்னிடம் சொல்லவில்லை). சட்டென்று நாக்கால் ஒரு முறை உதட்டை - எனது உதட்டை - ஈரப்படுத்திப் பார்த்தேன்; ம்ஹூம் - வியர்த்த மாதிரி தெரியவில்லை. ஆனாலும் சந்தேக புத்தியுடன் வலையில் தேடியதில் Chummy S. Sinnatamby மற்றும் Raymond Jack Last என்கிற உடலியலாளர்கள் தங்களின் Last's Anatomy: Regional and Applied புத்தகத்தின் பதினொன்றாவது பதிப்பின் இரண்டாம் பக்கத்தில், பூச்சி பூச்சியான எழுத்த

BEST OF FORWARDS - 34

மன்மோகன் சிங் : "என்னைய வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே!" சோனியா காந்தி : "என்னா வில்லத்தனம்?" அத்வானி : "ராஜதந்திரத்தை கரைத்து குடித்துவிட்டாயடா" மாயாவதி : "ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க" லாலு பிரசாத் யாதவ் : "வரும்... ஆனா... வராது." பிரணாப் முகர்ஜி : "முடியல..." வருண் காந்தி : "எல்லாரும் பாத்துக்க‌ங்க... நான் ஜெயிலுக்கு போறேன்.." ராகுல் காந்தி : "சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு!" கருணாநிதி : "பாடி ஸ்ட்ராங்... ஆனா.. பேஸ்மென்டு கொஞ்சம் வீக்." ஜெயலலிதா : "யப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே.." விஜயகாந்த் : "அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்.." ராமதாஸ் : "பட்.. எனக்கு அந்த டீலிங் ரொம்ப புடிச்சி இருந்தது." வைகோ : "இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?" தங்கபாலு : "வேணா... வலிக்குது... அழுதுருவேன்..!" சரத்குமார் : "ரிஸ்க்கு எடுக்குறது எனக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி" விஜய டி ராஜேந்தர் : "இதுவரைக்கும் என்ன யாரும் தொட்ட

படித்தது / பிடித்தது - 32

கடவுள் இல்லையென்பவர்கள் காதலிக்காதவர்கள், தேவதை இல்லையென்பவர்கள் உன்னைக் காதலிக்காதவர்கள். - சேவியர் நன்றி : கவிதைச் சாலை

கடிதம்: நியூ ஜெர்ஸியிலிருந்து பூமி

ஆர்குட்டில் பூமி என்பவர் எனக்கு எழுதிய scraps இவை: ############ 6 Apr hi saravana... heard abt ur blog thru my friend.. and start reading it... its really interesting to read it.. so just wanna say hi to you :) 7 Apr hi.. thanks 4 adding me... ur writings are interesting... it remembers me sujatha sir... i read most of ur posts yesterday... keep writing.. :) ############ பூமி, உங்கள் ஆர்குட் profileன் about meயில் " வித்தியாசமான மனிதர்களின் குணங்களில் மயங்கி கிடக்கும் ஒரு சாதாரண மனிதன் " என்று குறிப்பிட்டிருந்தது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. நான் அப்படியே vice-versa. அதாவது " சாதாரண மனிதர்களின் குணங்களில் மயங்கி கிடக்கும் ஒரு வித்தியாசமான மனிதன் ". அந்த வகையில் நீங்கள் எனது anti-particle. -CSK

இசை ஞானி ஆயிரம் - 4

கஜுராஹோ - ஒரு நாள் ஒரு கனவு காற்றில் வரும் கீதம் - ஒரு நாள் ஒரு கனவு ஒரு நாள் ஒரு கனவு - கண்ணுக்குள் நிலவு நிலவு பாட்டு - கண்ணுக்குள் நிலவு ரோஜா பூந்தோட்டம் - கண்ணுக்குள் நிலவு என்னைத் தாலாட்ட வருவாளா - காதலுக்கு மரியாதை ஆனந்த குயிலின் பாட்டு - காதலுக்கு மரியாதை ஒரு பட்டாம்பூச்சி - காதலுக்கு மரியாதை ஓ பேபி பேபி - காதலுக்கு மரியாதை அய்யா வீடு திறந்து தான் - காதலுக்கு மரியாதை

படித்தது / பிடித்தது - 31

கொஞ்சமும்... கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை தேநீர்க் குவளையை வைக்கும் ஸ்டாண்டாக ஒரு கவிதை புத்தகத்தை வைத்திருப்பார் அந்த புத்தகக் கடைக்காரர் என்று. - செல்வராஜ் ஜெகதீசன் நன்றி : நவீன விருட்சம்

அதிகாலை.காம்-ல் மீண்டும்

அதிகாலை.காம் இணையதளத்தில் எனது 'அழகிய தமிழ்மகன்' பதிவு இன்று வெளியாகியிருக்கிறது: http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=12447&lang=ta&Itemid=60

அயன் - மேலும் சில‌...

சுபா என்று பரவலாய் அறியப்படும் எழுத்தாள இரட்டையர்கள் சுரேஷ் ‍- பாலா வின் அழுத்தமான முத்திரை அயன் திரைப்படத்தில் தெரிகிறது - நிறைய காட்சிகளில் " அட! " போட வைக்கிறார்கள். ஹாலிவுட் திரைப்படங்களின் திரைக்கதைகளில் எழுத்தாளர்கள் வகிக்கும் அதே இடத்தை இவர்கள் அயன் திரைப்படத்தில் வகித்திருக்கிறார்கள் - இதுவே தமிழ் சினிமாவுக்கு புதிது. சுஜாதா வசனமெழுதிய படங்களில் கூட இயக்குநரின் ஆக்ரமிப்பு தான் அதிகமிருந்திருக்கிற‌து. ஆனால் அயன் திரைப்படத்தில் சுபா கட்டற்ற சுதந்திரத்துடன் செயல்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இதை - அதாவது எழுத்தாளர்களுக்கான இந்த சுதந்திரத்தை - சாத்தியப்படுத்தியதில் இயக்குநர் K.V.ஆனந்தின் பங்கும் நிச்சயம் இருக்கிறது என நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் எழுத்தாளனின் பங்கு மற்றும் சுத‌ந்திரம் என்கிற நோக்கில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாக எனக்குத் தோன்றுகிறது. சினிமாவில் ஏற்கனவே எழுதி வரும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கு இத்தகைய சுதந்திரம் கிடைத்தால் மேலும் நல்ல திரைப்படைப்புகள் உருவாகும். சுபாவை மிக்க வாஞ்சையுடனும், எதிர்பார்ப்புடனும் வரவேற்கிறேன். Hats Off சுரேஷ்‍

அயன் - சிறுகுறிப்பு

திறமையான திரைக்கதை (சுபா / K.V.ஆனந்த்) Congo காட்சிகளின் ஒளிப்பதிவு (M.S.பிரபு) அழகான அறிவான கதாபாத்திரம் (சூர்யா) புன்னகைக்க வைக்கும் வசனங்கள் (சுபா) தேர்ந்த‌ நடிப்பு (பிரபு / பொன்வண்ணன் / ரேணுகா) நல்ல‌ துணை நடிகர்கள் (ஜெகன் / கருணாஸ்) சில நிமிட "ஓ" (டெல்லி கணேஷ் / கலைராணி) அளவான காதல் காட்சிகள் (சூர்யா / தமன்னா) வில்லனின் பிண்ணனி குரல் ('கோலங்கள்' ஆதி) தேவையில்லாத பாடல்கள் (ஹாரிஸ் ஜெயராஜ்) ஒரு வரி கமெண்ட் : A Good Entertainer - Watch it!

அதிகாலை.காம்-ல் நான்

அதிகாலை.காம் இணையதளத்தில் பி.ஜே.பி. பற்றிய எனது பதிவு இன்று வெளியாகியிருக்கிறது: http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=12425&Itemid=62 இதை சாத்தியப்படுத்திய அத்தளத்தின் துபாய் நிருபர் விடுதலைவீரபத்திரன் அவர்களுக்கு நன்றி!

கடிதம்: மனித குல எதிரிகள்

மீண்டும் ஒரு பின்னூட்டதிற்கு பதிலாய் ஒரு தனிப்பதிவு - பி.ஜே.பி.யும் நானும் என்ற பதிவுக்கு பாலகிருஷ்ணா இட்ட பின்னூட்டதிற்கு. ############ பாலகிருஷ்ணா said... மனித குல எதிரிகள் இரு வகையினர். ஒருவர் நேரடியாக மனிதர்களை அழிப்பவர்கள். மற்றொருவர் மறைமுகமாக மக்களை அழிப்பவர்கள். இவர்களில் எவர் சிறந்தவர்கள் என்று பதிலிடுங்களேன் சரவணன். உதாரணமாக : டேய் நீ அந்த மதக்காரன் அதனால் சாப்பிடக்கூடாது. - நேரடியான தாக்குதல் சாப்பிடு சாப்பிடு நன்றாக சாப்பிடு என்று சொல்லி விட்டு முன்பே சோற்றில் விஷத்தைக் கலந்து வைப்பவர்கள் - மறைமுக தாக்குதல். Saturday, April 4, 2009 3:23:00 PM IST ############ பாலகிருஷ்ணா, இரு சாரருமே மிக மோசமானவர்கள் தான். சந்தேகமேயில்லை. If I am right, நீங்கள் காங்கிரஸைத்தான் இரண்டாவது வகையாகக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். பி.ஜே.பி.யை எதிர்ப்பதாக எழுதியதற்கு நான் காங்கிரஸுக்கு ஆதரவு என்று அர்த்தம் அல்ல. இந்திரா படுகொலைக்குப் பிந்தைய காங்கிரஸின் சீக்கியப் படுகொலைகள், இல‌ங்கை தமிழர் பிரச்சனையில் அவர்களின் பழமைவாத‌ நிலைப்பாடு, விவசாயிகள் கடன் தள்ளுபடி போன்ற பல விஷயங்களில் காங்கிரஸை

பி.ஜே.பி.யும் நானும்

முன்குறிப்பு : நீங்கள் ஓர் இந்து மத வெறியராக இருந்தால் தயவு செய்து இப்பதிவை மேற்கொண்டு படிக்க வேண்டாம்; நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை; நிஜமாகவே சொல்கிறேன். மீறிப்படிப்பது நம் இருவருக்குமே பயனளிக்கப் போவதில்லை என்பதால். நான் ஏன் பி.ஜே.பி.யை எதிர்க்கிறேன்? பி.ஜே.பி. என்றழைக்கப்படும் பாரதிய ஜனதா பார்ட்டியின் நிறம் காவி. அவர்களிடம் ஒற்றை வார்த்தையில் அக்கட்சியின் கொள்கையை சொல்லச் சொன்னால் " இந்துத்துவம் " என்று பெருமை பொங்கச் சொல்வார்கள். தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரையிலான அதன் உறுப்பினர்களில் கணிசமானோர் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள். 1992ல் நடந்த‌ பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தில் முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட லால் கிருஷ்ண‌ அத்வானி அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர். எல்லாவற்றுக்கும் மேலாக, பி.ஜே.பி.யின் 2009 பாரளுமன்றத் தேர்தல் அறிக்கை மறைமுகமாக‌ அயோத்தியில் பிரச்சனைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டித் தருவதாகச் சொல்கிறது. இவையெல்லாம் சில உதாரணங்கள். " மக்களின் பாவங்களினால் சாமி குத்தம் ஆகி விட்டது, அதனால் தான் சரியான‌ மழை இல்லை " என்று சொல்லி கடவுளை சாந

கடிதம்: Greetings from Bangalore

Dear Saravanan, Greetings from Bangalore. I am a regular visitor of Charuonline.com. I came to know about you from that website. I am an avid reader of Charu. Like you and many other youths, I also like the great tamil writer Sujatha. Come to point, I appreciate your good work on your website. It is very interesting. Keep it up. bye Shiva ############ Hi Shiva, I am seeing a lot of Sujatha fans having affinity to Charu Nivethitha. I don't understand the pattern of this trend exactly. The similarities could be the simple-yet-interesting writing style and the feminine pen-name ;) -CSK

கடிதம்: வேர்ல்ட் கிளாஸ் எழுத்தாளர்

சாருவுக்கு நன்றி பதிவுக்கு பாலகிருஷ்ணா இட்ட பின்னூட்டத்திற்கு ப‌திலெழுத ஆரம்பித்து, அது சற்றே நீண்டு விட்டதாலும், அதன் உள்ளடக்கம் என் நிலைபாட்டை தெளிவாக்குவதாய்த் தோன்றியதாலும், அதை தனியொரு பதிவாகவே போட்டு விடத் தீர்மானித்து விட்டேன். ############ பாலகிருஷ்ணா said... சரவணன் தங்களின் நன்றியுணர்ச்சியை நான் பாரட்ட விரும்பு அதே வேளையில் தங்களின் தளத்தில் இருக்கும் கருத்துச் செறிவு வாய்ந்த கட்டுரைகளுக்கு இணையாகுமா சாருவின் தளம் என்ற ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். வல்லரசு வேறு சாருவை வேர்ல்ட் கிளாஸ் எழுத்தாளர் என்று சொல்கிறார். இது எப்படி இருக்கிறது என்று தெரியுமா ? குருடர்கள் யானையைத் தடவி கருத்துச் சொல்லுவது போல இருக்கிறது. கடுமையான விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். வேறு வழி இல்லை. தற்போதைய பிளாக்கர்ஸ் எழுதும் அனுபவக் கதைகளை விட சாருவின் புனைவுக் கதைகள் எந்த வகையில் சிறந்தது என்று சொல்ல முடியுமா? இலக்கியமென்பது அந்த அனுபவக்கதைகள் மட்டும் தான் என்றால் ஒத்துகொள்கிறேன். சாருவின் சில விமர்சனக் கட்டுரைகள் அவரின் பார்வையில் இருந்து எழுதப்பட்டது என்பது தான் சரியானதாகுமே தவிர அவை அனைத்தும் உண்

SARKAR'S PHILOSOPHY - XXII

- Necessity is the mother of inventions; God, the surrogate. - It's her age which determines the center of his infatuation. - Feminism is all about riding on any masculine item like man. - Unfortunately, GOD created all theists as irreversible fools. - The phrase "Love you" is a rhetoric tautology; "Me too" too. - It's the weaker section who rules the world through the rules.

கூகுளும் சில அறிவுஜீவிகளும்

ஒவ்வொரு வருடமும் உலக அளவில், " முட்டாள்கள் தினம் " என்று சிறப்பித்துக் கொண்டாடப்படும் (?!) ஏப்ரல் ஒன்று அன்று, தமது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட applicationகளில் ஏதாவது விளையாட்டான‌, சுவாரசியமான‌ ஏமாற்று வேலை செய்கிறார்கள் google நிறுவனத்தார். கிட்டதட்ட பத்து வருடங்களாக வையக விரிவு வலையுடன் பரிச்சயமுள்ள‌ எனக்கு, இந்த விஷயம் எப்படி தெரியாமல் போனது எனத் தெரியவில்லை (போன வருடம் புதிதாய்த் திருமணம் ஆகியிருந்ததால் ஏப்ரல் ஒன்று relativeஆக பெரிதாய்த் தெரியவில்லை என்பதை மட்டும் மன்னிக்கலாம்). Google MentalPlex (மனதில் நினைப்பதை தேடித்தருவது), Luna/X (நிலவில் அமைக்கப்படும் ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு), Google Gulp (இதைக்குடிப்பவ‌ரின் புத்திசாலித்தனம் அதிகரித்து தேடுதல் எளிமையாகும்), Google Romance (ஏற்ற ஜோடியை தேடிப்பிடித்து அனுப்புவது), Gmail Paper (இலவச காகித அச்சு சேவை), Google TiSP (இணையத் தொடர்புக்கு கழிப்பறைக் குழாய்களை பயன்படுத்துவது), gDay (புதிய தளம் துவக்கப்படும் 24 மணி நேரத்திற்கு முன்பு அதைத் தேடித் தருவது), Google Manpower Search (மனிதர்களைக் கொண்டு நேரடிய

TODAY is MY DAY

“ A fool thinks himself to be wise, but a wise man knows himself to be a fool. ” - William Shakespeare ( As You Like It - Act 5 )