கடிதம்: Very different style

திருமதி சுந்தரி செல்வராஜ் அவர்கள் என் எழுத்துக்களைப் படித்து விட்டு எப்போதும் ஒரு விஷயத்தை மறக்காமல், மாற்றாமல் சொல்லுவார், "சுஜாதாவின் வாசகர்களாகிய நாம் அவரின் பாதிப்பில்லாமல் எழுதவே முடியாது" என. நான் "இதை திட்டு என்று எடுத்துக் கொள்வதா அல்லது பாராட்டு எடுத்துக் கொள்வதா?" எனக் கேட்பேன்.

ஆம். எப்போதுமே அது எனக்கு ஒரு சவாலாய்த் தான் இருந்திருக்கிறது - சுஜாதாவின் பாதிப்பு இல்லாமல் எழுதுவது. கிட்டதட்ட, தெரிந்த விஷயத்தை மறக்க முனைவதைப் போல. நிறைய முறை தோற்று தான் இருக்கிறேன். அதே போல் கவிதையில் வைரமுத்துவை விட்டு வெளியே வர ஆரம்ப காலங்களில் மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன்.

இந்நிலையில் தான் கார்த்திக் மணியன் என்பவருடனான என் சமீபத்திய வலை அரட்டையில், அவர் என் எழுத்தின் style பற்றிக் குறிப்பிட்டது எனக்கு மிகவும் முக்கியமாய்த் தெரிகிறது:

############

Very different style
One thing i really admire is
though you say your writing is the intellectual masturbation of the genius sujatha
you are following a different style
In this blog world,this is a very big consolation
cos
out of 10 blogs i read
8 bloggers follow sujatha's style
I also can understand that it is unavoidable
but still

############

அவர் சொன்னது சரியோ, தவறோ ஒரு கணம் சந்தோஷமாய்த் தான் இருந்தது.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி