சுதந்திரம் பற்றி ஸக்கரியா - 3

"Rediff"ல் வெளியான‌ மலையாள எழுத்தாளர் பால் ஸக்கரியாவுடனான நேர்காணலின் மூன்றாம் பகுதியின் தமிழாக்கம் இது.

############

அதிகார வர்க்கம் பொருளாதாரத்தில் பல்கிக்பெருகி
ஓர் ஒட்டுண்ணியாக மாறவே சோஷியலிசம் வழிவகுத்தது


இப்போதெல்லாம், எல்லோரும் இந்தியாவின் பொருளாதாரப் பின்னடைவுக்கு நேருவின் சோஷியலிசக்கொள்கை தான் காரணம் என்கிறார்களே. நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?

ஆம், நிறையவே. நேருவின் சோசியலிசம், காந்தியுடையதைப் போல மற்றுமொரு கனவு. சோஷியலிசக் கோவிலை அதிகாரம் பக்தியுடன் வணங்கும் என நினைத்தார். ஆனால் அதிகார வர்க்கம் பொருளாதாரத்தில் பல்கிப்பெருகி ஓர் ஒட்டுண்ணியாக மாறவே சோஷியலிசம் வழிசெய்தது. உதாரணமாய் கேரளாவின் தொழிற்சங்க இயக்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள், நீங்கள் என்ன செய்தாலும் அது உழைக்கும் நடுத்தர வர்க்கத்தின் நிலைமையை மட்டுமே உயர்த்துகிறது. கடைசியாக சோஷியலிசம் எந்தப்புரட்சியையும் ஏற்படுத்தவில்லை. குமாஸ்தாக்களின் வாழ்க்கைத்தரத்தை மட்டுமே உயர்த்தியிருக்கிறது


நாம் பின்பற்றியிருந்திருக்க வேண்டிய சரியான பொருளாதாரப்பாதை எது?

நம்மைவிட சிறப்பாய் மற்றவர்கள் எப்படி பிழைத்தெழுந்தார்கள், நம்மை விட குறைந்த வளங்களைக் கொண்டு எப்படி முன்னேறினார்கள் என்ற‌ உதாரணங்களைப் பாருங்கள். ஜப்பான், இந்தியாவோடு ஒப்பிட மிக முன்னேறியதாக இருக்கலாம். இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளை எடுத்துக்கொள்ளுங்கள். தாய்லாந்தில் நிறைய‌ கிராமப்புரங்கள் ஏழ்மையில் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.


ஆனால் இந்தியாவோடு ஒப்பிடும் போது அவை மிகவும் சிறிய நாடுகள்.

ஆட்சி நிர்வாகப்படி, ஆம். அவை மிகச்சிறியவை.


இந்தியாவின் அளவு பற்றி என்ன சொல்கிறீர்கள்? அது கூட பொருளாதாரத்தில் பின் தங்கியதற்கான காரணங்களுள் ஒன்றாய் இருக்கலாம்.

அளவின் அடிப்படையில் உங்களுக்கு ஒப்பிட சீனா இருக்கிற‌து. சீனாவில் கலாசாரப்புரட்சி அறுபதுகளில் நடந்தது. என் ஞாபகம் சரியானதென்றால், அது எழுபதுகளிலும் தொடர்ந்தது. அதனால் இந்த கடைசி இருபது ஆண்டுகளில் தான் சீனா நிறைய முன்னேறியுள்ளது. சீனவின் அடையாளமும் பி.ஜே.பி. அடையாளம் என்று எதைச்சொல்கிறதோ அதுவும் ஒன்றல்ல. மக்கள் தேச‌த்தை கட்டமைக்கும் பொறுப்பை ஏற்கத் தயாராய் இருக்கிறார்கள் - தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொள்வதன் மூலமும், நன்கு பலன் தரும் படி உழைப்பதன் மூலமும். "இதற்குக் காரணம் முடியாட்சியும் அதிகாரத்துவமும் தானா?" என்று கேட்டால், அதற்கு பதிலே இல்லை. அந்த வகையில், எதையும் எதனோடும் தொடர்பு படுத்தலாம்.


அமெரிக்காவின் முன்னேற்றத்தை எப்படி விளக்குவீர்கள்? முதலாளித்துவ முறை தான் காரணமா?

எந்த விதமான பொருளாதாரங்கள் கடைசியில் சொர்க்கத்தைத் தரும் என்கிற விவாதங்களுக்கு முடிவே இல்லை. அமெரிக்காவின் வீழ்ச்சி நிகழ்வதற்கு அருகாமையில் சுற்றிச் சூழ்ந்துள்ளாதாகச் சொல்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டமும், விளிம்பு நிலை ஏழ்மையும் அமெரிக்கா, ஐரோப்பா இரண்டு இடங்களிலும் உண்டு என்பது உங்களுக்கே தெரியும். ரஷ்யா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார சித்தாந்தத்தையே ஓரளவுக்கு சிதைத்து விட்டார்கள்.

கடைசியாக, எந்த விதமான‌ பொருளாதாரத்தை பின்பற்றுகிறோம் என்பதல்ல, ஆதார விஷயங்களின் சுக்கானைப் பிடித்திருக்கும் ஆண்களும் பெண்களும் தான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் புத்திசாலித்த‌னமும் அர்ப்பணிப்புணர்வும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்; தெளிவான சிந்தனையும் வேண்டும்.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி