Posts

Showing posts from March, 2009

கடிதம்: வாசிங்டனிலிருந்து சிவா

வணக்கம் சரவணன் எனது பெயர் சிவா. பிறந்து படித்து வளர்ந்தது மயிலாடுதுறையில். சில ஆண்டுகளாய் வாசிங்டனில் வசித்தல். மீண்டும் தமிழகத்தில் குடியேற திட்டம் மற்றும் ஆசை! நீங்கள் சொன்னது போலவே, சாரு தளத்தின் மூலம் உங்கள் வலைப் பூ வந்தேன். மிகவும் ரசித்து பல பதிவுகள் படித்தேன். நிறைய கருத்துகளில் உடன்பாடும் சில வற்றில் உடன்பாடு இல்லை! நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். எழுத எழுத எழுத்து வசப் படும் என்று கேள்வி பட்டிருக்கிறேன். நீங்கள் தமிழகத்தில் எந்த ஊர்? தற்பொழுது பெங்களூரில் என்ன செய்கிறீர்கள்? பெங்களூர் வாழ்க்கை உங்களுக்கு பிடித்துள்ளதா? பெங்களூர் பொருளாதரம் எப்படியுள்ளது? தமிழக அரசியலில் ஆர்வம் உண்டா? ஓய்வாக இருக்கும் பொழுது மின் அஞ்சல் தட்டுங்களேன்.... சிவா... ############ சிவா, முரண்பாடு. That's the key. யாரும் யாரோடும் நூறு சதவிகிதம் ஒத்துப் போக‌ முடியாது என்பதாலேயே மனித வாழ்க்கை இந்தப்பூமியில் இன்னமும் சுவாரசியமாக நகர்ந்து கொண்டிருக்கிற‌து. அதுவும் என் போன்ற ஒரு non-conformist ஆசாமியோடு ஒத்துப் போகிறீர்கள் என்றால் ஆச்சரியமே. கேட்பதற்கு சந்தோஷமாய்த் தான் இருக்கிறது. " என் பார்வைகள...

THE ULTIMATE IRONY

The Seven Social Sins - By Mahatma Gandhi Politics without principles Wealth without work Pleasure without conscience Knowledge without character Commerce without morality Science without humanity Worship without sacrifice. NB : This is an excerpt from BJP's PM Candidate L.K.Advani's Blog . Note that Aristotle’s Law of Non-Contradiction is failed here.

படித்தது / பிடித்தது - 30

.... சுகித்து நீ உறங்குகிறாய் என் விழிகளுக்குள் தூசியாக ... - ந. லக்ஷ்மி சாகம்பரி நன்றி : நிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்

ருத்ர நாதம்

Illayaraja Interview - Frontline (1989) பின்குறிப்புகள் : 1. இத்தகைய கோபம் ராஜாவிடம் இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை. 2. இந்தக் கோபம் தான் அவரை நல்ல‌ இசை தர வைத்தது என‌த் தோன்றுகிறது. [ Courtesy : Frontline and 7swara.com ]

இசை ஞானி ஆயிரம் - 3

அந்த நாள் ஞாபகம் - அது ஒரு கனாக்காலம் உன்னால தூக்கம் கெட்டு - அது ஒரு கனாக்காலம் காட்டு வழி கால் ந‌டையா - அது ஒரு கனாக்காலம் எனக்கு பிடித்த பாடல் - ஜூலி கணபதி த‌ண்ணி கொஞ்சம் - ஜூலி கணபதி மாருகோ மாருகோ - சதிலீலாவதி ஆசை அதிகம் வெச்சு - மறுபடியும் நலம் வாழ எந்நாளும் - மறுபடியும் எல்லோரும் சொல்லும் பாட்டு - மறுபடியும் எல்லோருக்கும் நல்ல காலம் - மறுபடியும்

சாருவுக்கு நன்றி

" சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியா " பற்றி Rediffல் மலையாள எழுத்தாளர் பால் ஸக்கரியா கொடுத்த‌ நேர்காணலின் நான்கு பகுதிகளையும் மொழிபெயர்த்து தனித்தனி பதிவுகளாகப் போட்டிருந்தேன். அவற்றின் சுட்டிகளை சாரு நிவேதிதா தனது வலைதளத்தில் கொடுத்தாலும் கொடுத்தார், எனது தளத்தை தரிசிப்பவர்களின் கணக்கு எக்கச்சக்கமாய் எகிறி விட்டது. இந்த ஒரு வார கால‌த்தின் நேரடி மற்றும் மறைமுக அனுபவங்களின் வாயிலாக, அவரது வலைதளம் மற்றும் வாசகர் குழாம் பற்றி நான் கண்டடைந்த‌ அவதானிப்புகள் சில‌ இங்கே (இவை முழுக்க முழுக்க எனது கவனிப்பின் கூர்மையை ஆதாரமாகக் கொண்டவை - இவற்றோடு சாருவோ மற்றவர்களோ முழுமையாகவோ பகுதியாகவோ முரண்படலாம்): பாராட்டவோ திட்டவோ எதோ ஒரு காரணத்துக்காக சாருவின் தளத்திற்கு நிறையப்பேர் விஜயம் செய்கிறார்கள். மாறுபட்ட கருத்திருந்தாலும் கிட்டத்தட்ட எல்லா தமிழ் பதிவர்களுமே அவர் தளத்தை வாசிக்கிறார்கள். குறிப்பாய் அவரை தொடர்ந்து விமர்சிப்பவர்கள் தினமும் தவறாது அவரது வலைதளத்தில் ஆஜராகி விடுகிறார்கள். அடிப்படையில் அவருடைய எழுத்திலிருக்கும் ஒருவித‌ வன்முறை எல்லோருக்கும் வசீகரமாயிருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ...

கடிதம்: பள்ளிக் கூண்டு

கார்த்திகா ரஞ்சனின் பள்ளிக் கூண்டு கவிதையை எனது படித்தது / பிடித்தது தொடரின் 29வது கண்ணியில் இணைத்திருந்தேன். அதற்கு அவரது எதிர்வினை: ############ Thanks. Appadiye antha pic-m serthu pottirukkalam. I like that pic very much than my poem. :) Just said. Anyway thank u very much for refer that. Karthika Ranjan. ############ கார்த்திகா, இந்தப் படத்தைக் காட்டிலும் ஈரம் உலரா கதைகள் என்கிற உங்கள் கவிதையின் படம் மிகக்கச்சிதமாய்ப் பொருந்திப்போகிறது. கிட்டதட்ட அதுவே கவிதையை சொல்லிவிடுகிறது என்பேன். அப்புறம் கவிதை மட்டுமல்ல; கடிதமும் தமிழில் எழுதலாம். -CSK

புயலிலே ஒரு தோணி

Image
"Ghajini is a phenomenal album. You'll find -- and argue over -- your individual favourite tracks, but very honestly, this could just be one of his finest albums ever. " கஜினி இந்தி பதிப்பின் பாடல்களுக்கு (இசை: புயல்) ராஜா சென் என்பவர் rediff.comல் எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி தான் மேலே நீங்கள் படித்தது. தவிர எல்லாப் படைப்புகளையும் மிகவும் கறாருடன் அணுகும் rediff.com ( Fashion படத்துக்கு கொடுக்கப்பட்ட‌து இரண்டு ஸ்டார்கள் ) இதற்கு கொடுத்தது ஐந்து ஸ்டார்கள். அதாவது A masterpiece . அதில் வரும் "Aye Bachchoo" என்கிற பாடல் தவிர (அதுவும் சுமார் தான்) மற்றவற்றில் சிலாகிக்க என்ன தான் உள்ளது என்று மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தேன். ம்ஹூம். ஒன்றுமே உறைக்கவில்லை. எல்லோராலும் வாய் பிளந்து எச்சில் வடிவது கூடத்தெரியாமல் ரசிக்கப்படும் பாடலான‌ "Guzarish" துரதிர்ஷ்டவசமாய் எனக்கு சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் மிகச்சிறந்த இசைக்கலைஞர் என்பதை மீண்டும் மீண்டும் ஒத்துக்கொள்கிறேன். இசையில் ரசிக்கும் படியாக பல நுட்பமான‌ experiments செய்ய அவரால் முடியும். இளை...

படித்தது / பிடித்தது - 29

பள்ளிக் கூண்டு பால்மணம் வீசும் மேனியில் பறவைக் கூண்டு வாசம் மெலிதாக பள்ளி சென்று வந்த முதல் நாளில். - கார்த்திகா ரஞ்சன் நன்றி : நேயமுகில்

காதலின் வலி

Image
சமீபத்திய கட்டுரை ஒன்றில் சாரு நிவேதிதா கிம் கி டுக் என்ற தென் கொரிய இயக்குநர் பற்றியும், அவரது the isle திரைப்படம் பற்றியும் சொல்லியிருந்தார். YouTubeல் தேடியதில் படத்தின் சில முக்கியக்காட்சிகள் சிக்கின. தரவிறக்கி வீட்டுக்கு வந்து பார்த்ததில் (அலுவலகத்தில் பார்க்கக்கூடாது. Ethics!), சாரு சிலாகித்தது அப்படியே வரிக்கு வரி நிஜம். அற்புத‌மான காட்சியமைப்பு, அழகான‌ ஒளிப்பதிவு, அடங்கிய‌ பின்னணியிசை, குறைவான வசன‌ங்கள் என தனியொரு அனுபவத்தை வழங்கியது ( ப்ரயாஸ் குப்தா வின் Siddharth - The Prisoner போல‌). இதை ஓர் உதாரணம் மூலம் விளக்குகிறேன். காட்சி பற்றிய சாருவின் வர்ணனையை கவனியுங்கள்: " ஹ்யூன் ஷிக் தன்னை விட்டுப் பிரிந்து செல்வதைத் தாங்க முடியாத ஹீ ஜின் மீன் தூண்டிலை எடுத்துத் தன்னுடைய யோனியின் உள்பகுதியில் விட்டு மாட்டி, அதை அந்தத் தூண்டில் கயிற்றின் மூலம் வெளியே எடுத்துத் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறாள்.இந்த முறை ஹ்யூன் ஷிக் அவளைக் காப்பாற்றுகிறான். அவளுடைய யோனிக்குள் சிறிய கிடுக்கியை விட்டு அந்தத் தூண்டில் கொக்கிகளை ஒவ்வொன்றாக எடுக்கிறான். பிறகு, புண் ஆறுவதற்காக யோனி வாயை மூடாமலேயே ...

BEST OF FORWARDS - 33

BEST OF FORWARDS - 32

Image
Note : The SUBJECT line of this e-mail is " SLUMDOG MILLIONAIRE "

இசை ஞானி ஆயிரம் - 2

குரங்கு கையில் மாலை - மும்பை எக்ஸ்பிரஸ் ஏலேய் நீ எட்டிப்போ - மும்பை எக்ஸ்பிரஸ் பூப்பூத்தது - மும்பை எக்ஸ்பிரஸ் உன்ன விட - விருமாண்டி கொம்புல பூவ சுத்தி - விருமாண்டி அந்த காண்டாமணி - விருமாண்டி ராம் ராம் - ஹே ராம் நீ பார்த்த பார்வைக்கு - ஹே ராம் இசையில் தொடங்குதம்மா - ஹே ராம் ராமரானாலும் - ஹே ராம்

கடிதம்: இசை ஞானி ஆயிரம்

karthik what happened to this....lemme me also be a part of this effort... nanda chennai ############ Hi Nanda, Thanks a lot for your concern. But that won't work. Because, as I mentioned already, this is "MY" list of top 1000 IR songs. If we work together, then the outcome will be "OUR" list. Hence please excuse. The delay happened because of peer pressures prompted by personal and official stuff in the recent past and will try to overcome the same in future. Sorry & Thanks, -CSK

சாருவின் எதிர்வினை

உமா ஷக்தி சிறுகதைகள் பற்றிய சாருவின் கருத்துக்களை விமர்சித்து நான் அவருக்கு எழுதிய கடிதத்துக்கு , அவரது எதிர்வினை இங்கே: http://www.charuonline.com/March09/tanthe.html ############ டியர் சாரு, நீங்கள் குறிப்பிட்ட கிம் கி டுக்கின் the isle படத்தின் சில காட்சிகளை YouTubeல் பார்க்க வாய்த்தது. அதைப்பற்றிய சில‌ கருத்துக்கள் இங்கே: http://www.writercsk.com/2009/ 03/blog-post_25.html அப்புறம், என் கடிதத்துக்கான தங்கள் பதில் அல்லது எதிர்வினைக்கு நன்றி. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அதைப் புரிந்து கொள்ள முயன்று வருகிறேன் - கனவில் கேட்ட கடவுளின் அற்புத வாசகங்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்த தாந்தேயின் சிறுத்தை போல். நன்றி, சி.சரவணக்கார்த்திகேயன்

மீண்டும் சாரு

Image
சாருவின் தளத்தில் என் நன்றிக் கடிதம் http://charuonline.com/March09/anubavam.html சாருவின் தளத்தில் ஸக்கரியா நேர்காணல் மொழிபெயர்ப்பு (4) : http://charuonline.com/March09/sackariatranslationPart4.html சாருவின் தளத்தில் ஸக்கரியா நேர்காணல் மொழிபெயர்ப்பு (3) : http://charuonline.com/March09/sackariatranslationPart3.html சாருவின் தளத்தில் ஸக்கரியா நேர்காணல் மொழிபெயர்ப்பு (2) : http://charuonline.com/March09/sackariatranslationpart2.html சாருவின் தளத்தில் ஸக்கரியா நேர்காணல் மொழிபெயர்ப்பு (1) : http://charuonline.com/March09/sackariatranslation.html ஸக்கரியாவின் நேர்காணல் - சாரு நிவேதிதாவின் கருத்து : http://charuonline.com/March09/zackariainteriview.html

BEST OF FORWARDS - 31

Image
Discussing the Divine Comedy with Dante [ Painting by Dai Dudu, Li Tiezi & Zhang An - 2006 ] Courtesy : cliptank.com

சுதந்திரம் பற்றி ஸக்கரியா - 4

"Rediff"ல் வெளியான‌ மலையாள எழுத்தாளர் பால் ஸக்கரியாவுடனான நேர்காணலின் நான்காம் பகுதியின் தமிழாக்கம் இது. ############ பி.ஜே.பி. ஒரு வெடிகுண்டின் மேல் அமர்ந்திருக்கிறது; வெடிக்கும் போது அதுவும் அழியும் இன்றைய அரசியல் தலைவர்கள் தெளிவான பார்வையும், ச‌முதாய அக்கறையும் இல்லாதவர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? ஆம். கிட்டத்தட்ட முழுமையாக. இதற்கு அர்த்தம் அரசியல் நேர்மை நலிவடைந்து வருகிறது, சமுதாயத்தில் நாம் எல்லோருமே சுயந‌லவாதிகளாக ஆகி விட்டோம் என்பதைப் பிரதிபலிக்கிறதா இது? இது சமுதாயத்தின் பிரதிபலிப்பே. ஆனால் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே. நடுத்தர வர்க்கத்தினர் அதிக அளவில் அடிப்படைவாதிகளாக மாறி வருகிறார்கள் என்பதும் இதற்கு காரணம். அடிப்படைவாதம் தான் ஒரே தீர்வு என அவர்கள் நினைக்கின்றனர். மற்றொரு காரணம் நடுத்தர வர்க்கத்திலிருக்கும் கணிசமான புத்திசாலிகளும் - விஞ்ஞானிகள். பொறியாளர்கள், மருத்துவர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் அது போன்றவர்கள் - நடுத்தர வர்க்கத்துக்கு உய‌ர்ந்து கொண்டிருக்கும் கீழ்வர்க்கத்தினரும் அரசியலிலிருந்து விலகியே இருக்கின்றனர். குமாஸ்தாக்களாக இருந்து பெ...

கடிதம்: Very different style

திருமதி சுந்தரி செல்வராஜ் அவர்கள் என் எழுத்துக்களைப் படித்து விட்டு எப்போதும் ஒரு விஷயத்தை மறக்காமல், மாற்றாமல் சொல்லுவார், " சுஜாதாவின் வாசகர்களாகிய நாம் அவரின் பாதிப்பில்லாமல் எழுதவே முடியாது " என. நான் " இதை திட்டு என்று எடுத்துக் கொள்வதா அல்லது பாராட்டு எடுத்துக் கொள்வதா? " எனக் கேட்பேன். ஆம். எப்போதுமே அது எனக்கு ஒரு சவாலாய்த் தான் இருந்திருக்கிறது - சுஜாதாவின் பாதிப்பு இல்லாமல் எழுதுவது. கிட்டதட்ட, தெரிந்த விஷயத்தை மறக்க முனைவதைப் போல. நிறைய முறை தோற்று தான் இருக்கிறேன். அதே போல் கவிதையில் வைரமுத்துவை விட்டு வெளியே வர ஆரம்ப காலங்களில் மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன். இந்நிலையில் தான் கார்த்திக் மணியன் என்பவருடனான என் சமீபத்திய வலை அரட்டையில், அவர் என் எழுத்தின் style பற்றிக் குறிப்பிட்டது எனக்கு மிகவும் முக்கியமாய்த் தெரிகிறது: ############ Very different style One thing i really admire is though you say your writing is the intellectual masturbation of the genius sujatha you are following a different style In this blog world,this is a very big consolation cos ou...

கடிதம்: ஓர் ஆர்வத்தால் கேட்கிறேன்

அன்புடன்! ஓர் ஆர்வத்தால் கேட்கிறேன். தங்கள் பக்கங்களில் உள்ள SARKAR'S பதில்கள், PHILOSOPHY என்பன தங்கள் சிந்தனையா?? மிக அருமை. Q:- ஒரு பெண்ணைப் புணர்ச்சி செய்ய‌ நல்ல நேரம் எது? A:- அவள் கணவன் இல்லாத நேரம். இக் கேள்விக் ஆன பதிலில் உள்ள கேலியை வெகுவாக ரசித்தேன். Q:- கடவுளை அடைய என்ன செய்ய வேண்டும்? A:- த்தூ... திருந்தவே மாட்டீர்களா? உண்மையிலே உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா??? தற்செயலாகக் கண்டேன். தொடர ஆவல் நன்றி! - Arunasalam JOHANADARAJAH(NADA), Paris, FRANCE ############ அருணாசலம், //SARKAR'S பதில்கள், PHILOSOPHY என்பன தங்கள் சிந்தனையா??// அதுல என்னங்க சந்தேகம்?! //உண்மையிலே உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா???// இல்லை. இந்தக்கணம் வரை இல்லை. - CSK

சுதந்திரம் பற்றி ஸக்கரியா - 3

"Rediff"ல் வெளியான‌ மலையாள எழுத்தாளர் பால் ஸக்கரியாவுடனான நேர்காணலின் மூன்றாம் பகுதியின் தமிழாக்கம் இது. ############ அதிகார வர்க்கம் பொருளாதாரத்தில் பல்கிக்பெருகி ஓர் ஒட்டுண்ணியாக மாறவே சோஷியலிசம் வழிவகுத்தது இப்போதெல்லாம், எல்லோரும் இந்தியாவின் பொருளாதாரப் பின்னடைவுக்கு நேருவின் சோஷியலிசக்கொள்கை தான் காரணம் என்கிறார்களே. நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? ஆம், நிறையவே. நேருவின் சோசியலிசம், காந்தியுடையதைப் போல மற்றுமொரு கனவு. சோஷியலிசக் கோவிலை அதிகாரம் பக்தியுடன் வணங்கும் என நினைத்தார். ஆனால் அதிகார வர்க்கம் பொருளாதாரத்தில் பல்கிப்பெருகி ஓர் ஒட்டுண்ணியாக மாறவே சோஷியலிசம் வழிசெய்தது. உதாரணமாய் கேரளாவின் தொழிற்சங்க இயக்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள், நீங்கள் என்ன செய்தாலும் அது உழைக்கும் நடுத்தர வர்க்கத்தின் நிலைமையை மட்டுமே உயர்த்துகிறது. கடைசியாக சோஷியலிசம் எந்தப்புரட்சியையும் ஏற்படுத்தவில்லை. குமாஸ்தாக்களின் வாழ்க்கைத்தரத்தை மட்டுமே உயர்த்தியிருக்கிறது நாம் பின்பற்றியிருந்திருக்க வேண்டிய சரியான பொருளாதாரப்பாதை எது? நம்மைவிட சிறப்பாய் மற்றவர்கள் எப்படி பிழைத்தெழுந்தார்கள், நம்மை வ...

கடிதம்: About Yavarum nalam

Hi Buddy, Thanks for adding me to your ORKUT. Yesterday I went to the movie "Yavarum Nalam". I rate it as the best tamil film of its kind. I like to read your review ASAP. -- Thanks & Regards P.Kalaiamuthan ############ Hi Amuthan, Good that somebody is there to expect. I am currently based @ Bangalore. Hope you know that here, not all the Tamil films are getting released. Some will be released late (like a month or so). And few, NOT at all. Now, let me tell you the curious case of " Yavarum Nalam ". It got released here in it's Hindi version as " 13B " but I don't like to watch it in Hindi. Also, I don't know whether the Tamil version will be released here or not (Most probably it won't). I always overrule the possibility of watching in pirated DVDs. The last chance is watching it in Tamil Nadu when I goto either Erode or Chennai. As of now, there are no plans. In fact, I am very much eager to watch the film specially for the P.C.SreeR...

கடிதம்: "Hi" from a doctor

hai... i read an article named ' WOMEN EMPOWERMENT' in ur blog.. it was there since feb 2nd. but i read it yesterday only.. you were telling about a girl who is wearing a T shirt containing the following words ' Once a month, I hate being a girl ”..... those are correct only.. whether u have experienced the pain during menstrual cycle. then how come u can criticise her... the horrible pain in this world are labour pain that's the pain during delivery of a child, next is the spasmodic pain of monthly cycles.. i'm not a feminist.. but some what i was irritated by ur comments - Dr.Seethalakshmi Kannan ############ Hi Madam, Got ur hot comments. Basically, I am against printing some non-sense text in girls' T-shirts. It's done predominantly for making any male to peep at it and on her extras (and most girls want that). Its nothing but exhibitionism. My sincere suggestion to such girls is rather make a pair of holes in the T-sh...

கடிதம்: சின்ன விண்ணப்பம்

அன்பருக்கு வணக்கம், உங்கள் இணையதளத்தை வாசித்தேன், உங்கள் தமிழ் எழுத்து நடை மிக அருமை. என் போன்ற சாமானிய வாசிப்பாளனுக்கு மிகவும் பிடித்தது. ஒரே நாளில் பாதிக்கு மேல் வாசித்தாயிற்று. ஒரே குறை ஆங்கிலத்தில் நிறைய எழுதியுள்ளீர்... அதுவும் மனதை கவ்வும் சில தலைப்புகளில். USELESS THINGS IN A MALE இன்னும் பல..... ஆங்கிலம் புரியாமல் இப்படி சொல்லவில்லை, தேடித் தேடி தமிழ் படிக்க ஆரம்பிக்கும் என் போன்றோருக்கு இது ஏமாற்றத்தை தருகிறது. ஆங்கிலத்தில் படிக்க எத்தனையோ தளம் உள்ளது.... அதை ஏன் நாங்கள் உங்கள் தளத்தில் படிக்கனும்? தமிழில் நிறைய எழுதுங்கள்...... -- நன்றி, ஜெயக்குமார். மும்பை. ############ ஜெயக்குமார், தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நான் பல்வேறு காரணங்களால் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் மட்டும் தான் எழுதினேன் (எழுத்துரு பிரச்சனை அதில் மிக முக்கியமானது. இன்னமும் பலர் லினக்ஸில் என் தமிழ் பதிவுகளை படிக்கமுடியவில்லை என்று சொல்கிறார்கள்). தவிர துரதிர்ஷ்டவசமாய் அப்போது என்னைப்படிக்க ஆரம்பிததவர்கள் பலர் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்கள் - அதுவும் பெண்கள் ;) அப்போது எழுதினால் படிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்...

சுதந்திரம் பற்றி ஸக்கரியா - 2

"Rediff"ல் வெளியான‌ மலையாள எழுத்தாளர் பால் ஸக்கரியாவுடனான நேர்காணலின் இரண்டாம் பகுதியின் தமிழாக்கம் இது. ############ இந்திரா காந்தி அல்லது ராஜீவ் காந்தி செய்த ஊழலில் கால் பங்கு தான் நரசிம்மராவ் செய்தார் தனி மனிதனின் சுய நலம் பற்றிச்சொன்னீர்கள். அவன் ஏழையாய் இருக்கும் போது அவன் கேரளாக்காரனா, தமிழனா, கன்னடனா அல்லது வெறும் இந்தியனா? தனி மனிதனாக பிழைத்திருத்தல் பற்றி மட்டுமே அவன் கவலைப்படுகிறான், அத‌ற்கு மேலான‌ எதைப்பற்றியும் அல்ல‌. அப்படித்தானே? ஒரு எல்லை வரை, ஆம். அதை விட‌ துணைக்கலாசாரங்களே சிறப்பான அடையாளத்தைத் தருகின்றன‌ - தேசிய உணர்வை விட நிர்வாக ம‌ற்றும் கலாசார அளவை. ஒரு கேரளாக்காரனாய் அவனுக்கு கூடுதல் பெருமை இருக்கிறது. ஒரு தமிழனாய் அவனுக்கு கூடுதல் பெருமை இருக்கிறது. தமிழ்நாடு மேலே வர அவன் ஏதாவது செய்ய விரும்புகிறான். எல்லா விஷயங்களுமே தில்லி என்கிற யாரும் நெருங்க‌ முடியாத, தொலைவிடத்தில் நடக்கிறது. அது மிக தூரத்தே நடக்கும் ஒரு நிழல் நாடகம் போன்றது. ஆட்சி தில்லியில் மையமிட்டிருப்பதும், பலமான தேசிய உணர்வைக் கொண்டு வர முடியாத அளவில் மத்திய மாநில உறவு நிலவுவதும் தான் இதற்கு...

சுதந்திரம் பற்றி ஸக்கரியா - 1

"Rediff On The NeT "ல் Freedom என்கிற தலைப்பின் கீழ் வெளியான‌ மலையாள எழுத்தாளர் பால் ஸக்கரியாவுடனான நேர்காணலின் தமிழாக்கம் இது. ############ பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடும் நேரம் தவிர‌ ஒரு இந்தியக்குடிமகன் எப்போதும் தன்னை இந்தியன் என உணர்வதேயில்லை பால் ஸக்கரியா , கேரளாவின் நன்கு அறியப்பட்ட‌ எழுத்தாளர்களுள் ஒருவர். அவருடைய கதைகளைப்போலவே அவரின் அரசியல் கருத்துக்களும் முன்னோடியானவை, முற்போக்கானவை. அவருடைய அரசியல் பத்திகள் எப்போதும் ஒரு முர‌ண்பாட்டுத்தன்மையோடு தான் முடியும். அவருடைய கேள்வி கேட்கும் தன்மையும், பழமைக்கெதிரான கருத்துக்களும், அவரை கேரளாவிலிருக்கும் பிற கற்பனை வளமிக்க எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றன. ஷோபா வாரியரு டனான இந்த "எல்லைகள‌ற்ற" உரையாடலில், இந்த‌ நாவலாசிரியர் பி.ஜே.பி.காரர்கள், இடதுசாரிகள், முஸ்லிம்கள்,நேரு தொண்டர்கள், காந்தியவாதிகள் பற்றியும், கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவிற்கு என்ன தவறு நேர்ந்தது என்பது பற்றியும் பேசுகிறார்: நீங்கள் சுதந்திர இந்தியாவில் வாழ்வ‌தாக எப்போது உணர்ந்தீர்கள்? நான் அதை எப்பொழுதாவத...

இசை ஞானி ஆயிரம் - 1

ஓம் சிவோகம் - நான் கடவுள் பிச்சைப்பாத்திரம் - நான் கடவுள் இளங்காத்து வீசுதே - பிதாமகன் பிறையே பிறையே - பிதாமகன் அடடா - பிதாமகன் மாலை என் வேதனை - சேது சிக்காத சிட்டொண்ணு - சேது நெனச்சு நெனச்சு - சேது வார்த்தை தவறி விட்டாய் - சேது எங்கே செல்லும் இந்தப்பாதை - சேது

இசை ஞானி ஆயிரம் - தோற்றுவாய்

இளையராஜாவை " இசை ஞானி " என்று அழைப்பதை justify செய்யும் அவரது ஆயிரம் பாடல்களை இங்கே பட்டியலிடவிருக்கிறேன். என் பார்வையில் இளையராஜா இசையமைத்த‌ சிறந்த ஆயிரம் பாடல்கள் என இவற்றை எடுத்துக்கொள்ளலாம். நான் இசையைக்கற்றறிந்தவன் அல்ல. ஆனால் இசையை நுட்பமாய் ரசிக்கத் தெரிந்தவன். பாடலின் ராகம், தாளம் பற்றிய புரிதல் இல்லாவிட்டாலும், எனக்குப் பிடித்த சங்கீதம் யாரிடமிருந்து வந்தாலும் அதை அங்கீகரிக்க விரும்பும் ஒரு பாமர ரசிகன். உங்களுக்கு நல்ல பாடல் எனத் தோன்றுவது எனக்கும் அப்படியே இருக்க வேண்டும் என அவசியமில்லை. ஆக, இது எனது சொந்த ரசனை சார்ந்த பட்டியலே. தவிர இதில் பாடல்களுக்கு கொடுக்கப்படும் எண்கள் அதன் தர வரிசையைக் குறிப்பதல்ல. வாரம் பத்துப்பாடல்கள் வீதம் நூறு வாரங்கள் இதை ஒரு தொடராக எழுதுவதாக‌ உத்தேசம். இவ்வளவு காலம் எடுத்துக் கொள்வது இந்தப்பட்டியலின் Perfectionக்காக. இது பல்வேறு விவாதங்களை உருவாக்கும் என உணர்ந்தே இதைத் தொடங்கியுள்ளேன். சர்வதேசத் தரமுடைய இசைக்குறிப்புகளை வழங்கிய ஒரு மாபெரும் கலைஞன் ந‌ம்மிடையே வாழ்ந்தான் என எதிர்காலம் பெருமைப்படவும், அவனுக்கு உரிய மரியாதையளிக்கத் தவறிவிட்ட...

படித்தது / பிடித்தது - 28

யுத்தம் பற்றிய ஒரு மிகச் சுருக்கமான அறிமுகம் நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களானால் அது கண்ணீரின் குருதி நீங்கள் ஒடுக்குபவர்களானால் அது குருதியின் கண்ணீர். - சேரன் நன்றி : நீ இப்பொழுது இறங்கும் ஆறு (காலச்சுவடு பதிப்பகம்) பின்குறிப்பு : தமிழீழ விடுதலைப்போரைப் பற்றி இத்தனை depth உடன் இவ்வளவு precise ஆக இதற்கு மேல் சொல்ல முடியாது. கல்லூரி நாட்களில் இதைப்படித்த பாதிப்பில் பல இரவுகளை உறக்கமில்லாமல் கழித்திருக்கிறேன். It's justified now.

BEST OF FORWARDS - 30

சாருவின் கடவுள்

Image
எந்தவொரு தீவிரமான நாத்திகவாதியாலும் கூட இந்த அளவுக்கு ஆழமான அழகியலுடன் கடவுள் மறுப்பு பேச முடியாது.

BOFக்கு ஒர் எதிர்வினை

BEST OF FORWARDS - 29 ஐப் பார்த்துவிட்டு என் மனைவி " ஏ.ஆர். ரஹ்மான் இளையராஜா முன் கைகட்டியிருப்பதை யாரும் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். ரஹ்மானிடம் அடக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் எடுத்துக்கொள்வார்கள் " என்றாள். " அடுத்தவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நினைப்பவர்கள் ஏற்கனவே அடக்கமாய்த்தான் இருப்பார்கள் " என்றேன். என்ன? சரி தானே!

உல‌கெல்லாம் ஒரு சொல்

இன்று காலை மனைவியுடன் ஒரு சிறிய அல்லது மிகச்சிறிய சண்டை. திட்டிவிட்டு அலுவலகம் கிளம்பி விட்டேன் - மனது கேட்கவேயில்லை. போகும் வழியில் "Sorry.. I Love You.." என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை. அனுப்ப மாட்டாள் எனத் தெரியும். சந்தோஷத்தில் என்னைக்கொஞ்சம் திட்டியிருப்பாள் என்பதும் தெரியும். மாலையில் கண்ணாடி பார்த்து மெல்லிய ஒப்பனை செய்து கொள்வாள். வீடு திரும்பும் எனக்குத்தர ஒரு பிரத்யேகப்புன்னகையுடன் காத்திருப்பாள். ******* இதைத்தான் மிகச்சுலபமாய் ஒரே வார்த்தையில் "காதல்" என்கிறார்கள்.

BEST OF FORWARDS - 29

Image
Courtesy : www.kollywoodtoday.com

படித்தது / பிடித்தது - 27

வேண்டியது வேண்டி வேண்டியது கிட்டியபின் வேண்டியது வேண்டா மனது - கனிமொழி நன்றி : மரத்தடி இணையதளம்

BEST OF FORWARDS - 28

Image
Courtesy : THE TIMES OF INDIA

சாருவுக்கு ஒரு கடிதம்

சாரு நிவேதிதாவுக்கு நான் எழுதிய கடிதம் அவரது வலைதளத்தில்... http://charuonline.com/March09/KonjamPesaVendum.html அந்த‌க்கடிதத்தின் hyperlinkகளுடன் கூடிய முழுமையான‌ version இது : டியர் சாரு, அது என்னவென்றே தெரியவில்லை - நமக்குள் ஒத்துப்போகவே மாட்டேன் என்கிறது. இதற்கு முன்பு உங்களுக்கு எழுதிய போதும் உங்களை விமர்சித்தே எழுதினேன் - இபோதும் அப்படியே. அடிப்படையில் உங்களின் தீவிர வாசகன் நான் - உங்கள் புத்தகங்களை ஒன்று விடாமல் வாசிக்கும், உங்கள் வலைப்பக்கத்தை தினமும் எதிர்பார்க்கும், ஒரு fanatic. சில மாதங்கள் முன்பு என் வாசிப்பு ரசனை சார்ந்து தமிழின் மிகச்சிறந்த நூறு புத்த‌கங்களை நான் பட்டியலிட்ட போது அதில் உங்களின் இரண்டு புத்தகங்களும் இருந்தன‌ - அது நவீனத் தமிழ் இலக்கியப்பரப்பில் தவிர்க்கவே முடியாத உங்கள் எழுத்துக்கு நான் செலுத்தும் ராஜமரியாதை. ஆனால் அடுத்து நீங்கள் தேறாத ஒரு படைப்பைக் கொடுத்தால் நிச்சயம் அதை விமர்சிப்பேன். அது போன்ற‌ கறாரான அளவுகோள்கள் தான் ஒரு நல்ல விமர்சகனை உருவாக்க முடியும். படைப்பளியின் திறன், ஆளுமை, புகழ், பதவி, செல்வம், செல்வாக்கு, மரியாதை, சரித்திரம், கொள்கை, மொழி...