THE WOMEN EMPOWERMENT

உடனடி அதிர்ச்சி தந்து திரும்பத்திரும்ப யோசிக்க வைக்கும் மகாவாக்கியங்கள் எப்போது வேண்டுமானலும், யாரிடமிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். நேற்று மாலை ரோமம் திருத்தி வீட்டுக்குத் திரும்புகையில் எதிர்ப்பட்ட ஒரு வட இந்திய‌ பெண்ணின் டிஷர்ட் மார்பில் நான் படிக்க நேர்ந்த வாசகம் இது:

Once a month, I hate being a girl

அந்தப்பெண்ணுக்கு (அல்லது சிறுமிக்கு) பத்து அல்லது பன்னிரண்டு வய‌திருக்கலாம். அதிக இரத்தமற்ற, மிகச்சன்னமான, அழகிய‌ முகம். சர்வ நிச்சயமாய் முலைகள் இன்னும் முளைக்கவே இல்லை (டிஷர்ட் வாசகத்தைப் பார்த்துத் தான் அவள் வயதுக்கு வந்து விட்டதையே புரிந்து கொள்ள முடிந்தது).

அந்த வாக்கியத்தை ஒரு கவிதையில் பயன்படுத்துவது சாதாரணம். அது கருத்து சுதந்திரம். அதையே மார்பில் எழுதிக்கொண்டு பொதுவிடத்தில் அலைவதற்கு வேறு அர்த்தம். கிட்ட‌த்தட்ட‌ வெற்றிலை பாக்கு போட்டு, ரோஸ் பவுடர் பூசி, வளையல் கை தட்டி வாடிக்கையாளரை அழைப்பது போன்றது.

அதே வயதுப்பையன் தன் சட்டையில் “The length of mine is six inches and beyond” என்று எழுதுவதற்கு ஒப்பானது இது. இந்துத்துவப் பிற்போக்குத்த‌னங்களை மிக்கடுமையாக எதிர்ப்பவன் நான். ஆனாலும் சில சமயம், இந்த தேசத்தில் ராம்சேனாக்களும் தேவை தானோ என எண்ண‌த்தோன்றுகிறது.

இதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்டால் தாலிபான் என்பார்கள்.

Comments

Anonymous said…
THINK WE WELCOME GLOBALIZATION..... DARE TO SEE THINGS
palani said…
she may like to create a stir.But comparing her to a hooker is too much.
வசந்த் said…
இந்த டிஷர்ட் வாசகம் எனக்கு ஒன்றும் ஆட்சேபகரமானதாகத் தோன்றவில்லை. இன்னும் சொல்லப் போனால், இன்னும் பல பெண்கள் இந்த டிஷர்ட்டை அணிந்துகொள்ள வேண்டும் என்பேன்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி