ஆஸ்கர் - சில கருத்துக்கள்

  • இரண்டு ஆஸ்கர் வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் - இதை நான் சொல்வது ஒரு கலைஞனாக அல்ல; சக இந்தியனாக மட்டும்.
  • Slumdog Millionaireக்காக சிறந்த Sound Mixingக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கும் இந்தியர் ரெசுல் பூக்குட்டிக்கு என் பாராட்டுக்கள்.
  • சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து வாங்கிய இந்தி பாடலாசிரியர் குல்ஸாருக்கு எனது பிரியங்கள்.
  • இலங்கைத்தமிழ்ப்பெண்ணான‌ M.I.A. (எ) மாதங்கி மாயா அருள்பிரகாசம் நூலிழையில் விருதைத் தவற விட்டது எனக்கு மிக‌ வருத்தமே.
  • நான் ஏற்கனவே சொன்னது போலவே Adapted Screenplay, Cinematography பிரிவுகளில் Slumdog Millionaire விருது வாங்கியதில் என‌க்கு திருப்தி.
  • ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விரைவில் பாரத ரத்னா அறிவிப்பார்கள் - வெளிநாட்டுக்காரன் பாராட்டினால் தான் நமக்கு சுரணையே வரும்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி