படித்தது / பிடித்தது - 7

எத்தனை பேர் நட்டகுழி எத்தனை பேர் தொட்டமுலை
எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ் நித்தநித்தம்
பொய்யடா பேசும் புவியில் மடமாதரை விட்டு
உய்யடா உய்யடா உய்.

- பட்டினத்தார்

நன்றி: பாலகுமாரன் மற்றும் சாரு நிவேதிதா

பின்குறிப்பு:

இந்தப்பாடல் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் முன்பு பாலகுமாரனின் இனியெல்லாம் சுகமே நாவலில் படித்தது (பதினைந்து வயது. இவ்வரிகளை அடிக்கோடிட்டு Superb என்று எழுதியிருக்கிறேன். அப்போது இது எந்த வகையில் பிடித்திருந்தது என சொல்லத்தெரியவில்லை). மீண்டும் நேற்று சாரு நிவேதிதாவின் கடவுளும் நானும் கட்டுரைத்தொகுதியில் இது படிக்கக்கிடைத்தது.

நிஜமாகவே ஒரு கணம் ஸ்தம்பிக்கவைத்தது. இந்த லெளகீக வாழ்வின் அர்த்தமின்மையும் அதையொட்டிய நிலையாமையும் பற்றிய எண்ணம் ஆக்ரமித்து, ஒரு வித அவநம்பிக்கையும் ஆயாசமும் மனதில் சூழ்ந்து வதைத்தது. அப்போது ஊருக்குப்போயிருக்கும் என் மனைவி செல்பேசியில் அழைத்தாள். சத்தமில்லாமல் தினசரி வாழ்வின் அபத்தங்களுக்குத் திரும்பினேன்.

மற்றபடி பட்டினத்தாரின் சமாதியைப் போய்ப்பார்ப்பதிலும், பாபா படத்திலிருந்து விபூதி கொட்டிவதிலும் எனக்கு ஆர்வமில்லை.

Comments

Vimal Kumar said…
Can u explain the meaning of the lines in simple tamil???
Let me try..

யோனி நுழைத்து, மார்பு தடவி, உதடு சுவைத்துப் பெறும் பெண் சுகம் காலங்காலமாக பலர் அனுபவித்தறிந்தது. அதை தவிர்த்து, தினம் பொய்களையே பேசி வாழும் இந்த பூமியில் மோட்சமடைவாயாக‌.

This is just a raw translation..
BalHanuman said…
Awesome translation, CSK.
Way to go....

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி