Posts

Showing posts from February, 2009

செல்லுலாய்ட் போதி

Image
ஒரு சனிக்கிழமை, அந்த வார இறுதியில் வெளியான ஒரு திரைப்படத்தை பெங்களூரிலுள்ள ஒரு மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கில் மூன்று பேர் மட்டும் அமர்ந்து பார்த்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். அது தான் நடந்தது. அந்த சனிக்கிழமை இன்றைய தினம். அந்த திரையரங்கு Fame Lido. அந்த மூவரில் ஒருவன் அடியேன். அந்தத் திரைப்படம் "Siddharth - The Prisoner" . திறமையான திரைக்கதை (Pryas Gupta), அழகான ஒளிப்பதிவு (Mrinal Desai), நேர்த்தியான பின்னணி இசை (Sagar Desai), கச்சிதமான வசனங்கள் (Hitesh Kewalia), உறுத்தாத‌ உடையமைப்பு (Isha Ahluwalia, Jeneva Talwar), யதார்த்தமான‌ நடிப்பு (Rajat Kapoor, Pradeep Kabra, Pradip Sagar, புதுமுகம் Sachin Nayak) என படம் எல்லா முனைகளிலும் அள்ளிக் கொண்டு போனது. இயக்குநர் மற்றும் தயாரிப்பளரான Pryas Guptaவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமெனில், தேவையற்ற காட்சியென்று எதுவுமே படத்தில் இல்லை. எல்லாக்காட்சிகளுமே பார்வையாளனுக்கு ஏதாவது உணர்த்துகின்றன அல்லது கதையை நகர்த்துகின்றன. இன்னொரு விஷயம் படத்தின் மொத்த வசனங்களையும் ஒரு A4 சைஸ் தாளில் அடக்கி விடலாம். மற்றப...

பெங்களூர் - சில குறிப்புகள்

பெங்களூர் முன்னிரவுப்பொழுதுகளில் அதன் தகுதிக்கு மீறி மின்னுகிறது - எந்தவொரு இந்தியப்பெருநகரத்தையும் போல. எண்ணிக்கையில் பாதி விழுக்காடு இருக்கும் ஒருவழிச்சாலைகளை கடக்க இருபுறமும் கவனிக்க வேண்டியிருக்கிறது. பி.எஸ்.என்.எல் புண்ணியத்தில் ஐம்பதடிக்கு ஒரு முறை தீபிகா படுகோனின் வினைல் புன்னகை தடுமாற வைக்கிறது. ஆங்காங்கே மில்லிமீட்டர் உடையுடுத்தி ஓர் உபதேவதையின் சாயலில் சன்னமாய்ச் சிணுங்கியபடி நகரும் நிஜ தீபிகாக்கள் தனி. குளிரை சாக்கு வைத்து தினம் ஒரு முறை குளிக்கும் அவஸ்தையிலிருந்து அழகான வெள்ளைத்தோல் பெண்கள் விடுதலை அடைகின்றனர். காலியாயிருக்கும் இருக்கையில் எதிர் பாலினரோடு எவ்வித போலி சங்கோஜமுமில்லாமல் அமர்ந்து கொள்கின்றனர். ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிந்த பெண்கள் அடிக்கடி தங்கள் கைகளைத் தூக்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஜீன்ஸ் அணிந்த இளம் பெண்கள் தம் உள்ளாடை நிறம் மற்றும் ப்ராண்டை உலகிற்கு உரக்க‌ அறிவிக்கிறார்கள். பெங்களூரின் தட்ப வெப்ப நிலையைப்பற்றி அதன் அற்புதங்களைப் பற்றி அல்லது வினோதங்களைப் பற்றி சிலாகிக்கிறார்கள். டி.வி. கடைகள் முன் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு பார்த்து இந்தியாவின் தோல்விகளுக...

படித்தது / பிடித்தது - 26

ஈழம்... துவக்குகள் டாங்கிகள் செல்கள் விமானங்கள் தற்கொலைகள் கொலைகள் வன்புண‌ர்தல்கள் கடத்தல்கள் மாவீரர்கள் துரோகிகள் போர்கள் பேச்சுவார்த்தைகள்' ஒப்பந்தங்கள் வார்த்தைகள்... வார்த்தைகள்... வார்த்தைகள்... ஒரு வார்த்தையல்ல‌ மரணம். - சுகுணா திவாகர் நன்றி : மிதக்கும்வெளி

எங்கள் ஆசான்

Image
எழுத்தாளர் சுஜாதா (03 மே 1935 - 27 பிப்ரவரி 2008) உனக்கு நினைவஞ்சலி செலுத்துவதில் எனக்கு நிச்சயமாய் உடன்பாடில்லை புதைக்கப்பட்டவர்களுக்கானது அது விதைக்கப்பட்டவர்களுக்கு அல்ல.

NO 2 BJP&Co.

" There are no rains and food production has fallen due to the sins committed by various people in the past. Previous governments didn’t provide any facilities to temples. I will give money to Gods and also focus on city development. I believe in God. I have allocated money so that Gods will be pleased and shower mercy on us. " The above statement is made by Karnataka chief minister B.S.Yeddyurappa in justification to a whopping Rs.130 crores allocation for temples and mutts in the state's annual budget. Yet another reason why I am asking people "SAY NO TO BJP" . பின்குறிப்பு : கற்பூரம் தொட்டுக்கும்பிட்டு விபூதி இட்டுக்கொள்வது கடவுள் பக்தி; மக்கள் வரிப்பணத்தை கோயிலுக்கு வாரி இறைப்பது சூ... கொழுப்பு.

படித்தது / பிடித்தது - 25

இந்தச் சிங்கம் சிங்கத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன் படங்களில் படக்காட்சிகளில் வித்தைக் காட்சிகளில் காட்சிசாலைகளில் கனவுகளில் பிடரிமயிரின் தோரணையுடன் பிளந்த வாயின் கூர்பற்களுடன் பாய்ச்சலின் பயங்கரத்துடன் ஓய்வான வேளையில் சாந்தத்தின் வெகுளியுடன் என் பயத்தின் மறுவுருவாய் எனக்குள் மிதந்தது அது இந்தச் சிங்கத்தைப் பார்க்கும்போது புரிகிறது சிங்கத்தை இதுவரை பார்த்ததேயில்லை நான். - எம்.யுவன் நன்றி : மரத்தடி இணையதளம்

படித்தது / பிடித்தது - 24

தமிழ் எனக்கும் தமிழ்தான் மூச்சு ஆனால் பிறர்மேல் அதைவிட மாட்டேன் - ஞானக்கூத்தன் நன்றி : ஞானக்கூத்தன் கவிதைகள் இணையதளம்

ஆஸ்கர் - சில எதிர்வினைகள்

இணையதளங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி எழுதித்தீர்க்கிறார்கள். மிகப்பலர் பாராட்டி; அரிதாய்ச் சிலர் திட்டி. இன்று ஒரு வலைதளத்தில் படித்த பதிவின் தலைப்பு - "ஆஸ்கர்க்கு பெருமை..... ரஹ்மானால் !!!" பின்குறிப்பு : அந்த வலைதளத்தின் பெயர் "பிதற்றல்கள்" ################# இன்று ஜிடாக்கில் பேசிய ஒரு நண்பர் மிகவும் ஆதங்கத்துடன் பேசினார். "ஏ.ஆர்.ரஹ்மான் மூணு ஆஸ்கர் விருதுகளுக்கு நாமினேட் ஆனாரு" "ஆமாங்க. நல்ல விஷயந்தான்" "ஆனா பாவம், ரெண்டு விருது தான் வாங்கினாரு" எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "விடுங்க. அடுத்த தடவை மூணு என்ன‌ நாலாவே வாங்கிடுவாரு" "உங்களுக்குப்புரியுது. ஆஸ்கர் கமிட்டிகாரனுக்கு தெரிய மாட்டேங்குதே" பின்குறிப்பு : அந்த நண்ப‌ர் என் வலைதளத்தைப் படிப்பதில்லை. ################# என் நண்பன் ஒருவன் மிகவும் ஆர்வக்கோளாறு. நேற்று மாலை எனக்கு தொலைபேசினான். குரல் மிகவும் உற்சாகமாகக்காணப்பட்டது. "நான் ம்யூஸிக் கத்துக்கப்போறேன்டா" "என்னடா, திடீர்னு?" "எல்லாம் ரஹ்மானால தான்" "என்னடா சொல்ற?" ...

படித்தது / பிடித்தது - 23

அடிக்கடி பார்க்க முடிகிறது யானையைக் கூட மாதக் கணக்காயிற்று மண்புழுவைப் பார்த்து. - கல்யாண்ஜி நன்றி : கல்யாண்ஜி கவிதைகள் (புதுமைப்பித்தன் பதிப்பகம்)

படித்தது / பிடித்தது - 22

முத்தம் கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும் ஒரு காப்பி சாப்பிடலாம் வா - தேவதேவன் நன்றி : தேவதேவன் கவிதைகள் (தமிழினி பதிப்பகம்)

BEST OF FORWARDS - 27

Image

ஆஸ்கர் - சில கருத்துக்கள்

இரண்டு ஆஸ்கர் வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் - இதை நான் சொல்வது ஒரு கலைஞனாக அல்ல; சக இந்தியனாக மட்டும். Slumdog Millionaire க்காக சிறந்த Sound Mixingக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கும் இந்தியர் ரெசுல் பூக்குட்டிக்கு என் பாராட்டுக்கள். சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து வாங்கிய இந்தி பாடலாசிரியர் குல்ஸாருக்கு எனது பிரியங்கள். இலங்கைத்தமிழ்ப்பெண்ணான‌ M.I.A. (எ) மாதங்கி மாயா அருள்பிரகாசம் நூலிழையில் விருதைத் தவற விட்டது எனக்கு மிக‌ வருத்தமே. நான் ஏற்கனவே சொன்னது போலவே Adapted Screenplay, Cinematography பிரிவுகளில் Slumdog Millionaire விருது வாங்கியதில் என‌க்கு திருப்தி. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விரைவில் பாரத ரத்னா அறிவிப்பார்கள் - வெளிநாட்டுக்காரன் பாராட்டினால் தான் நமக்கு சுரணையே வரும்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் பற்றிய எனது கருத்தில் என் மனைவிக்கு சிறிதும் உடன்பாடு இல்லை (அவள் ஒரு தீவிர ‌ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகை). அந்தப்பதிவை நான் எழுதியத‌ற்குப் பழிவாங்கும் விதமாக‌ கடந்த இரு நாட்களாக உண‌வில் உப்பும் காரமும் கூடக்குறையப் போட்டு வைக்கிறாள். அது கிடக்கட்டும். ஸ்டார் மூவிஸில் ஆஸ்கர் லைவாக ஒளிபரப்பப்படுவதால் இன்று காலை எல்லா வீட்டு வேலைகளையும் அப்படியே போட்டு விட்டு ரிமோட்டுடன் டி.வி. முன்னால் அமர்ந்து விட்டாள். நானும் வேறு வழியின்றி அவளுடன் உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். Slumdog Millionaire க்காக சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுக்கொண்ட Chris Dickens பேசுகையில், தான் இந்தியாவை மிகவும் நேசிப்பதாக‌க் குறிப்பிட்டார். உடனே என் மனைவி, " இந்தியாவை எல்லோருக்கும் பிடிக்கிறது - இந்தியர்களைத்தவிர " என்று சொன்னாள். அவள் என்னைத்தான் சொல்கிறாளோ என நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் Slumdog Millionaire க்காக சிறந்த பின்னணி இசைக்கான விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டது. பின்பு அதில் வரும் " Jai Ho " பாடலுக்காக மற்றொரு விருது. நல்லவேள...

படித்தது / பிடித்தது - 21

காலமும் மனதும் இருவேறு திசைகளில் பயணிக்கிறது வெறும் வேகத்தடைகளை இலக்குகளென பாசாங்கு செய்துகொள்கிறது வாழ்க்கை - லீனா மணிமேகலை நன்றி : கதைசொல்லி (பிப்ரவரி - ஏப்ரல் 2007)

படித்தது / பிடித்தது - 20

மயிலினம் தோன்றும் முன்பிருந்தே கிருஷ்ணனை அலங்கரித்து வந்திருக்கிறது அதன் பீலி. - தென்றல் நன்றி : கொங்குதேர் வாழ்க்கை - 2 (தொகுப்பு - ராஜமார்த்தாண்டன்)

FEW HINDI MOVIES...

Image
Due to both personal and official commitments, I missed to write reviews for some of the Hindi films which I have watched in the recent past (?!). Here are the patch-works. Fashion : Madhur Bhandarkar's Fashion is a realistic movie which narrates about the grey areas in the world of Fashion and alternatively justifies the emergence of confidence sprouting in the teen girls' in Indian metros. Its just a caution symbol to this glamorous world, told via the life of Meghna Mathur in a fashionable way. The three noted things in the film are screenplay (Madhur Bhandarkar), cinematography (Mahesh Limaye) and stunning performance by Prianka Chopra. Kangana Ranaut and Mugdha Godse also did a good job. I am rating this as the second best film (next only to "A Wednesday") which I have seen last year. Well done Madhur Bhandarkar! Rab Ne Bana Di Jodi : The specialty about Rab Ne Bana Di Jodi is that it is NOT an yet another SRK movie. In fact, the movie features Anushka Sharma as ...

இன்று போய் நாளை வா

நாளை நள்ளிரவில் அறிவிக்கப்படவிருக்கும் ஆஸ்கர் முடிவுகளை உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது - முக்கியமாய் நூறு கோடி மக்கட்தொகை கொண்ட‌ இந்த இந்திய தேசம். எல்லாம் " Slumdog Millionaire " என்கிற பிரிட்டிஷ் படத்துக்காக மூன்று ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்காக. இப்படியொரு சூழ்நிலையில் நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்கு கசப்பூட்டுவதாய் இருக்கலாம். கடவுள் நம்பிக்கையில்லாத நான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தப்படத்திற்காக‌ ஆஸ்கர் விருது கிடைக்கக்கூடாது என‌ மிகத்தீவிரமாக கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கிறேன். அதற்கான காரணங்கள் மிக எளிமையானவை. இந்தப்பாடல்களும், பின்னணி இசையும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை (Not even it's best of A.R.R.) இந்த விருது இந்திய த் திரைப்பட‌ இசையை மிகத்தவறான முறையில் உலகிற்கு அறிமுகப்படுத்தக்கூடும் உதாரணமாய், டி.ராஜேந்தர் திறமையானவர் தான். ஆனால் " வீராசாமி " படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டிருந்தால் ஒரு தமிழராக நீங்கள் எப்படி உணர்வீர்களோ அதே மனநிலையைத்தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ...

A TAMIL GIRL @ OSCARS

Image
Why you always digging on my nerve? I feel weak, when I say "please" you keep on Does breaking me make you feel so strong? -Mathangi Maya Arulpragasam [From the Lyrics of the track " Far Far " in the album " Kala " - 2007] Do you know who is this Mathangi Maya Arulpragasam? OK. Everybody knows that A.R.Rahman is nominated for 3 Oscars in 81st annual Academy Awards going to be announced tomorrow. 2 of these 3 nominations, he is sharing with a couple of other people. Yes. The Academy Award for Music (Song) category will be given to both the composer and lyricist. For " Jai Ho " song, A.R.R. is nominated along with Gulzar and for " O Saya " song, he is nominated with M.I.A. This M.I.A. (acronym for " Missing In Action ") is the stage name of the girl whom I have asked about initially in this post - Mathangi Maya Arulpragasam (simply "Mathangi" hereafter). Mathangi is a Sri Lankan Tamil who is living currently in U.K. (i...

BEST OF FORWARDS - 26

Image
Kirchhoff's Current Law (KCL)

படித்தது / பிடித்தது - 19

பிரச்னை பிரச்னை என்றால் பிரச்னைதான் பிரச்னையில்லையெனில் பிரச்னையில்லை பிரச்னையா பிரச்னையில்லையா என்பதுதானே பிரச்னை - விக்கிரமாதித்யன் (எ) நம்பிராஜன் நன்றி : விக்கிரமாதித்யன் கவிதைகள் (சந்தியா பதிப்பகம்)

படித்தது / பிடித்தது - 18

யோனிகளின் வீரியம் பலகோடி ஆண்டுகள் கழிந்தொரு பரிணாமத்தில் உபயோகமற்று உன்குறி மறைந்துபோகும் அக்கணத்தில் புரியும் உன் சந்ததிகளுக்கு எம் யோனிகளின் வீரியம் - குட்டி ரேவதி நன்றி : கீற்று இணையதளம்

அழகிய தமிழ்மகன்

இன்று(ம்) அலுவலகத்துக்குத் தாமதமாய்க் கிளம்பிய காரணத்தால் ஆட்டோவில் செல்ல நேர்ந்தது. பயணத்தினூடே ஆட்டோ ஓட்டுநருக்கும் எனக்குமிடையே நிகழ்ந்த சம்பாஷனை இது. போக வேண்டிய இடம் பற்றிய குறிப்புகளை நான் தமிழில் சொல்ல, அவர் தான் முதலில் பேச்சு கொடுத்தார். "எந்த ஊரு?" "ஈரோடுங்க" "எனக்கு விழுப்புரம்" "சரிங்க" "குடும்பம் எல்லாம் ஒசூர்ல இருக்கு" "கல்யாணமாயிடுச்சுங்களா?" "ஆச்சு. ஒரு் பையன்" " அப்புறம்? " "காலையில வந்துட்டு ராத்திரி போயிடுவேன்" "தினமுமா?" "ஆமாம்" "அங்கயே ஆட்டோ ஓட்டலாமே?" "பெங்களூர் அளவுக்கு வருமானம் வராது" "குடும்பத்த இங்க கூட்டிட்டு வந்திடலாமே?" "அது சரி வராது" "ஏங்க? செலவு ஜாஸ்தியா?" "அது இல்ல" "வேற என்னங்க?" "பையன் தமிழ் படிக்கனும்" பின்குறிப்பு : மேடைதோறும் தமிழை வளரவைப்பதாக‌ வாய்கிழியப் பேசிக்கொண்டு, கொஞ்சம் கூட‌ வெட்கமே இல்லாமல், தங்கள் சந்ததியினரை தமிழ் ஒரு பாடமாய்க் கூட இல்லாத கான்வென்ட் ப...

பெங்களூர் = பெண்+கள்+ஊர்

தலைப்பிலிருப்பது போல் பெங்களூருக்கு பகுபத உறுப்பிலக்கணம் எழுதியவன் நிச்சய‌ம் மிகுந்த ரசனைக்காரனாக இருக்க வேண்டும். அதுவும் கள்ளுண்டு முயங்கும் பெண்களைப் பார்க்க வேண்டுமே - பெங்களூர் குளிருக்கு இதமாய் (" இவளுங்களை எல்லாம் வரிசையாய் நிறுத்தி வெச்சு ஒவ்வொருத்தரா ...க்கனும் மச்சி " என்பான் என் நண்பன். எனக்கு அதெல்லாம் ஒத்து வராது - இவ்விஷயத்தில் நான் சுத்த சைவம்). பெங்களூர் வந்த புதிது. புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவைக் கொண்டாடும் முகமாய் நண்பர்களோடு பிரிகேட் ரோடு போயிருந்தேன். மிகுந்த கூட்டம் - ஜனம் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. எல்லோரிடமும் செயற்கையான ஒரு உற்சாகம் கொப்பளித்தது - ஏதோ செலுத்தப்பட்டவர்கள் போலிருந்தார்கள். பொதுவாய் மிகப்பல கணங்களில் நாங்கள் நடக்கவே இல்லை - கூட்டமே எங்களை நகர்த்திச்சென்றது. ஜோடியாய் உரசியபடி, எங்களுக்கு பக்கவாட்டில் நடந்து கொண்டிருந்த அந்த இளைஞனையும் இளைஞியையும் அப்போது தான் கவனித்தேன். அவ‌ளுக்கு எத்தனை வயதென‌ துல்லியமாய்ச் சொல்ல முடியவில்லை - முந்தைய நிமிஷம் தான் ருதுவானவள் மாதிரி இருந்தாள். மிகச்சன்னமான மார்புகளும் அதற்கு சற்றும் பொருத்தமில...

படித்தது / பிடித்தது - 17

உங்கள் பெயர் அருகில் வர அச்சப்படுகிறது பறவையின் தானியங்களில் உங்கள் பெயரை எழுதி வைத்திருக்கிறீர்கள் - ராஜா சந்திரசேகர் நன்றி : ராஜா சந்திரசேகர் கவிதைகள் இணையதளம்

படித்தது / பிடித்தது - 16

சுய விலக்கம் நகரத்தின் மோஸ்தருக்குள் முற்றாய் பொருந்திவிட்ட என்னை அத்தனை சுளுவாய் அடையாளம் கண்டுவிடமுடியாது எனக்கே தெரியுமன்றாலும் அறுந்த செருப்பை தெருவோர காப்ளரிடம் தான் தைத்துக்கொள்கிறேன் வீட்டுக்கே வந்து டோபி துணியெடுத்துப் போகிறான் முன்னொரு காலத்து என் அம்மா போல நீயமரும் இருக்கையிலேயே எனக்கும் சவரம் சலூனில் பரம்பரையின் அழுக்கு அண்டிவிடக்கூடாதென்று நகங்களைக்கூட நறுவிசாக வெட்டிக்கொள்கிறேன் அதீத கவனத்தோடு ஊரை மறக்கிறேன் புறப்பட்டுவந்த சுவடு தெரியாதிருக்க சண்டேக்களில் மட்டனோ சிக்கனோதான் பீப் என்றால் என்னவென்றே தெரியாது என் பிள்ளைகளுக்கு ரிசர்வேசனுக்கெதிரான உங்களின் உரையாடலின் போதும் "நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்..." என்கிற போதும் யாரையோ வைவதாய் பாவனை கொள்கிறேன் பதைக்கும் மனமடக்கி "உங்கம்மாளப் போட்டு பறையன் சக்கிலிப் போக ..." என்ற வசவுகளின் போது அதுக்கும் கூட உங்களுக்கு நாங்க தான் வேணுமா என்றும் சாவு வீடுகளில் வதக்வதக்கென்று யாராச்சும் ஜதிகெட்டு கொட்டடித்தால் எங்கப்பனாட்டம் உன்னால அடிச்சி ஆடமுடியுமா என்றும் கேட்கத்துள்ளும் நாக்கை எத்தனை சிரமப்பட்டு அடக்...

இசையும் அழகும்

M TV, V Channel, Zoom TV, 9x M, Enter 10, Music India, B4U Music, ETC Music, ZEE Music, Sahara One போன்ற இந்தி பாடல்களை தொடர்ச்சியாய் ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனல்களை நான் அதிதீவிரமாய் பார்க்க ஆரம்பித்திருந்த காலம் அது. அப்போது தான் அப்பாவியான என் மீது அபாண்டமான அந்த‌க் குற்றத்தினை சுமத்தினாள் என் மனைவி. நிரபராதிகள் குற்றவாளிகளாய் பார்க்கப்படுவது கோவலன் காலத்துப் பழைய சித்தாந்தம். இதுவும் அது போலத்தான். குற்றச்சாட்டின் மூலக்கதை மிக எளிமையானது. கீழ் வரும் பாடல்களை அதன் இசை மிகப்பிடித்திருந்ததன் காரணமாக அவற்றைத் திரும்பத் திரும்பப் பார்த்ததனால் (அல்லது கேட்டதனால்) வந்த வினை அது. Chakna Chakna (Namastey London) Uncha Lamba (Welcome) Soni De Nakhre (Partner) Zara Zara Touch Me (Race) You’re My Love (Partner) Just Chill (Maine Pyaar Kyun Kiya) Jee Karda (Singh Is Kinng) அரை குறை ஆடையுடன் கேத்ரினா கைஃப் வலம் வரும் எந்த பாடலைப் போட்டாலும் வாயை பிளந்து கொண்டு பார்க்க உட்கார்ந்து விடுகிறேன் என்பதே அவளின் தார்மீகக்குற்றச்சாட்டு. அப்போது தான் கவனித்தேன், மேற்கண்ட பாடல்கள் அனைத்திலும் கேத்...

அஹம் ப்ரம்மாஸ்மி

"அகோரின்னா என்னங்க?" "ஆசை அச்சம் அருவருப்பு இதையெல்லாம் அறுத்தவன் தான் அகோரி" "அப்படின்னா நானும் ஒரு அகோரி தாங்க‌" "அது எப்படி?" "போன வாரம் தாங்க எனக்கு விவாகரத்து ஆச்சு" "இருக்கட்டும், அதனால?" "எனக்கு ஆசை அச்சம் அருவருப்பு எல்லாம் என் மனைவி மேல தாங்க"

படித்தது / பிடித்தது - 15

என் கவிதையில் கடவுள் எனது கொடும் விதி, கடவுள் என் கவிதையில் இருப்பாரென்றால் நானே கடவுள் கடவுள் உன் துயரக்கண்களில் இருப்பாரென்றால் நீயே கடவுள் நமது இந்த மகத்தான உலகில் எவருமில்லை நம்மிருவர் முன் மண்டியிட. - பாப்லோ நெரூதா ( மொழிபெயர்ப்பு : சுகுமாரன்) நன்றி : பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை பதிப்பகம்)

படித்தது / பிடித்தது - 14

உன் கவிதையை நீ எழுது உன் கவிதையை நீ எழுது எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி நீ அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும் தத்தளிப்பைப் பற்றி எழுது எழுது உன் கவிதையை நீ எழுது அதற்கு உனக்கு வக்கில்லை என்றால் ஒன்று செய் உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று என்னைக் கேட்காமலேனும் இரு. - பசுவைய்யா (சுந்தர ராமசாமி) நன்றி : கொல்லிப்பாவை (1985)

முன்ஜாக்கிரதை மிகமுக்கியம்

கார்டூனிஸ்ட் மதனின் "முன்ஜாக்கிரதை முத்தண்ணா" வை ஆனந்த விகடன் வழி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அது போன்றவர்களை நிஜ வாழ்க்கையிலும் ஆங்காங்கே சந்திக்க நேர்ந்திருக்கலாம். அதைச்சார்ந்த எனது மிகச்சமீப அனுபவம் பற்றியதே இப்பதிவு. பெங்களூர் ஐ.ஐ.எம். நடத்தும் PGSEM படிப்புக்கான (செலவு இந்திய ரூபாய் மதிப்பில் ஏழரை லகரம் மற்றும் சில்லறை) நுழைவுத்தேர்வுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை தூக்கத்தின் சுகத்தைத் துறந்து, அதிகாலையில் அலாரம் வைத்து, அடித்து பிடித்து எழுந்து, பாதி குளித்து மீதி குளிக்காமல், கையில் கிடைத்த மூன்று அங்குல நீளத்துக்கு முக்கும் - பள்ளிக்கூட தினங்களின் எச்சமான ஒரு பென்சிலையும், நிலக்கரிக்கு சவால் விடும் நிறமுடைய பாதி உடைந்த அழுக்கு அழிரப்பர் ஒன்றையும் தேற்றி, சட்டைப்பையில் திணித்துக் கொண்டு ஓடி, இரண்டு BMTC பேருந்துகள் மாறி ஏறி இறங்கி, தேர்வு நடக்கும் கல்லூரியை அடைந்து, பதிவெண்ணுக்கு அறை எண் தேடிக் கண்டுபிடித்து, பதட்டத்துடன் இருக்கையில் வந்து தட்டுத்தடுமாறி அமர்ந்தால் (ஒரு நிமிடம் பொறுங்கள் - கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொள்கிறேன்), எனக்கு முன்னால் அவன் மிகச்சாவகாசமாய் அமர்...

படித்தது / பிடித்தது - 13

அடங்காத காமத்துடன் தவித்துக்கொண்டிருக்கிறேன் உனக்கோ அழ்ந்த அயர்ந்த உறக்கம் விடிந்ததும் எப்படியாவது உன் வாயைப் பிடுங்கி ரெண்டு அறை விடுவேன். - மகுடேஸ்வரன் நன்றி : " காமக்கடும்புனல் " தொகுப்பு, United Writers

பழையன புகுதலும் - 8

Image
குறிப்பு : 2006ம் ஆண்டு காதலர் தினத்தன்று எழுதியது

பழையன புகுதலும் - 7

ஒரு கிராமத்துக்கவிஞனின் கடைசிக்கவிதை என்மனசுக்குள்ள மழையடிச்சு முளைவிட்ட ரஞ்சிதமே உன்னழகக்கவியெழுத பூமியில பாஷையில்ல - பொத்திவெச்ச‌ ரத்தினமே பொன்மேனிச்சித்திரமே உன்னப்பாக்கற நேரமெல்லாம் ரத்தமெல்லாந்தீபுடிச்சு புத்தியெல்லாம் பூப்பூக்குதே. ஒத்தப்பார்வையில உயிருருக வெச்சவளே - நீ குத்தவெச்சநேரத்தில பக்கத்தில பாத்திருந்தா மேளதாள‌ சத்தத்தோட பரிசம்போட்டிருப்பேன் கழுத்தோரம் மீசகுத்த‌ முத்தமொண்ணு வெச்சிருப்ப்பேன் கொடுத்துவெக்கலியே. நீவர்ற பாதையில கால்கடுக்க காத்திருந்தேன் காவக்காரன் போலஉன் காலடியில் பூத்திருந்தேன் வெச்சகண்ணுவாங்காம உன்னையே பாத்திருந்தேன் - நீ மிச்சமீதிவெச்சதெல்லம் பொக்கிஷமா சேகரிச்சேன். நெஞ்சுக்குள்ளே பூத்தவளே நெனப்புக்குள்ள நெற‌ஞ்சவளே தஞ்சமுன்னு தேடிப்போக தரணியில ஆரிருக்கா? கொஞ்சிப்பேசிப் போனவளே குத்தங்குறை இன்னதுன்னு கொஞ்சம்போல சொல்லிப்போடி ஒத்தநாடிஉடம்புக்காரி. வலைவீசுற கண்ணுக்கு அணைபோட்ட அஞ்சுகமே அலைபாயிற மனசுக்கு அணைபோட மறந்தியே கல்லானநெஞ்சுகுள்ள காதலுன்னு தெச்சமுள்ளு - நீ சொல்லாமபோனாலும் இல்லாம ஆகாது. இத்தனையும் சொன்னதெல்லாம் எப்படியோபோகட்டும் - ஆனா ஒத்தையில படுக்கையில என...

பழையன புகுதலும் - 6

அந்தரங்க ஸ்பரிசங்களின் ஆழ்நுண்கணங்களில் நீ துடித்து வெடிக்க‌ பதறிப்பூக்குமொரு வெட்கக்கீற்று. குறிப்பு : 2004ம் ஆண்டு காதலர் தினத்தன்று எழுதியது

பழையன புகுதலும் - 5

சிலநூறு காவியங்கள் சில்லறை காப்பியங்கள் சிற்சில இதிகாசங்கள் படைக்கும் மகாகவியாய் இருக்கலாம் நான்; ஆனால் நுந்தை கிறுக்கிய‌ நல்லைந்தரையடி நனிகவிதைக்கு நிகரில்லையெதுவும். குறிப்பு : 2003ம் ஆண்டு காதலர் தினத்தன்று எழுதியது

பழையன புகுதலும் - 4

கோடிப்பூக்களுக்கு ஒற்றைக்காம்பு அவள் மார்பு. குறிப்பு : 2002ம் ஆண்டு காதலர் தினத்தன்று எழுதியது

பழையன புகுதலும் - 3

என்றோ நிகழவிருக்கும் என் மர‌ணத்திற்கு அழ‌ கொஞ்சம் கண்ணீர் மிச்சம் வைத்திருக்கலாம் நீ. குறிப்பு : ஒரு சண்டைக்குப்பின் உடைந்து அழுத நண்பனுக்கு எழுதியது [2004]

பழையன புகுதலும் - 2

வாஞ்சையுடன் விரல்பிடித்து நடக்கவோ கடற்கரையோரம் கிளிஞ்சல் பொறுக்கவோ பஞ்சுத்துகள் பறக்க தலையணைப்போரிடவோ சண்டையிட்டு கிள்ளி அழவைக்கவோ பொறாமைப்படவோ பெருமைப்படவோ பால்யநதியின் அறியாமையினூடே இருந்திருக்க வேண்டுமெனக்கு மலர்மழை பனியன்ன தங்கையொருத்தி. குறிப்பு : என் ராக்கி சகோதரி காயத்ரியின் பிறந்த நாளில் எழுதியது [2006]

படித்தது / பிடித்தது - 12

செத்துப்போன மாட்டைத் தோலுரிக்கும்போது காகம் விரட்டுவேன் வெகு நேரம் நின்று வாங்கிய ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு சுடுசோறெனப் பெருமை பேசுவேன் தப்பட்டை மாட்டிய அப்பா தெருவில் எதிர்ப்படும்போது முகம் மறைத்துக் கடந்துவிடுவேன் அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும் சொல்ல முடியாமல் வாத்தியாரிடம் அடி வாங்குவேன் தோழிகளற்ற பின் வரிசையிலமர்ந்து தெரியாமல் அழுவேன் இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால் பளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று. - சுகிர்தராணி நன்றி : " இரவு மிருகம் " தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம் குறிப்பு : இதே தொகுப்பிலுள்ள சுகிர்தராணியின் மற்றொரு கவிதையின் சில வரிகளும் என்னை மிக‌க் கவர்ந்தவை. மயிர்கள் சிரைக்காத என் நிர்வாணம் அழிக்கப்படாத காடுகளைப் போல கம்பீரம் வீசுகிறது உன்னோடு பகிரவென்றே செதுக்கப்பட்டிருக்கிறது என் கற்படுக்கை என்றாலுங்கூட வளர்ந்துகொண்டுதானிருக்கின்றன என் யோனி மயிர்கள்

படித்தது / பிடித்தது - 11

எழுத்தை வரைகிறது குழந்தை. -மதி (எ) மதன் நன்றி : பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!

பழையன புகுதலும் - 1

அவர் இசைக்கு இறை; நான்‍ அவர் இசைக்கு இரை. குறிப்பு : " ஹே ராம் " படம் பார்த்த பின் இளையராஜா வைப்பற்றி நான் எழுதிய ‍கவிதையிலிருந்து (பிப்ரவ‌ரி 2000)

படித்தது / பிடித்தது - 10

சலிப்பு, குடி, புணர்ச்சி இன்னபிற எந்த சினிமாவையும் முழுதாக அமர்ந்து பார்க்க முடிவதில்லை இப்போதெல்லாம் மனதிற்குப் பிடித்த புத்தகமேயானாலும் இரண்டு மணிநேரத்திற்குமேல் படிக்க முடிவதில்லை கிரிக்கெட் மேட்ச் என்றாலும் 10 ஓவர்களுக்குமேல் பார்க்க முடிவதில்லை தொலைக்காட்சியை பேரழகியாய் இருந்தாலும் எவளையும் ஒரு வருடத்திற்குமேல் காதலிக்க முடிவதில்லை பெற்றோரிடமும் மனைவி குழந்தைகளிடமும் தொடர்ந்து அன்பு செலுத்த முடிவதேயில்லை உத்தியோகமும் அடிக்கடி மாறிக் கொண்டேயிருக்கிறது இவனுக்கு நெருக்கமான நட்புகளும் நெடுங்காலம் தொடர்வதில்லை எழுதுவதும் சலித்துப் போகிறது பல சமயம் இப்பட்டியலில் சிக்காமல் இருப்பது கோல்ட் பிளேக் கிங்ஸும் ஓல்ட் மாங்கும் எப்போதாவது புணர்ச்சியும் சுய இன்பங்களும் - ஜ்யோவ்ராம் சுந்தர் நன்றி : மொழி விளையாட்டு

THE PROTESTING PANTIES

Image
Hello! My dear beautiful girl, before you start reading this, I have a question for you: " Do you have pink panties? " Sorry, if it's embarrassing. But you don't have any other option, particularly if you are " Loose and Forward ". If you have one, continue reading this; else rush to the nearby shop to buy it. Nisha Susan , a south Delhi girl and journalist in Tehelka's web portal started a Consortium of Pub-going, Loose and Forward Women and announced and kicked off the Pink Chaddi Campaign (also termed as " Chaddi War ") on 5th February 2009 to oppose the Sri Ram Sena for the Mangalore Pub attack. The "war" is as simple as that - yet powerful. The Pink Chaddi Campaign will send pink underwear to the office of the Mangalore pub attack perpetrators on Valentine's Day. " Be imaginative, have fun and fight back! " is the core idea behind this. Here is an except from the Campaign's blog-page : What can you do? Step 1 ...

படித்தது / பிடித்தது - 9

படையல் படையல் புசிக்கும் தெய்வம் போல் என் கவிதைகளை வாசிக்கிறாள் அவள். - Manki (எ) முத்து கண்ணன் நன்றி : குசேலனின் வலைப்பதிவு

BEST OF FORWARDS - 25

Image
The E-Mail Inbox Percy Mahinda Rajapaksa, President, Democratic Socialist Republic of Sri Lanka

VIRGINITY FOR SALE

This summary is not available. Please click here to view the post.

ஏழாம் உலகம்

Image
தசாவதாரத்திற்குப்பிறகு அதற்கு இணையாய் நான் எதிர்பார்த்திருந்த படங்கள் இரண்டு - ஒன்று ரோபோ ; மற்றது நான் கடவுள் . இரண்டு கதாநாயகர்கள், மூன்று கதாநாயகிகள், நான்கு தயாரிப்பாளர்கள், ஐந்து வருடங்கள் மாறியதால் ஏற்பட்டதல்ல அது - பாலா என்ற ஒற்றை சொல்லுக்காக‌ உண்டானது. காசி அகோரிகள், Cannibalism, அஹம் ப்ரம்மாஸ்மி போன்றவை இன்ன பிற. பதினான்கு ஆண்டுகள் முன்பு, ஜாதக தோஷத்தால், சிறுவனாய் காசியில் விட்டுச் செல்லப்பட்ட ருத்ரனை (ஆர்யா) அவன் தந்தையும், தங்கையும் தேடி காசிக்கு வருவதில் தொடங்குகிறது படம். ஆசை, அச்சம், அருவருப்பு அறுத்த ஓர் அகோரியாய் இருக்கும் ருத்ரன், குருவின் கட்டளைப்படி உறவுகளையும் அறுத்து மீண்டு வர தன் ஊருக்குத் திரும்புகிறான். அந்த ஊரில் ஊனமுற்றோரை வைத்து பிச்சையெடுக்கும் தொழில் செய்யும் தாண்டவன், கண்ணில்லாமல் பாடிப்பிழைக்கும் அமிர்தவல்லியை (பூஜா) போலீஸ் உதவியுடன் பிச்சையெடுக்க இழுத்து வந்து விடுகிறான். எவரும் புணர விரும்பா அகோர முகம் கொண்ட ஒருவனின் இச்சைக்கு இரையாகவிருந்த‌ அவளை ருத்ரன் காப்பாற்றினானா என்பது மீதிக்கதை. படத்தின் அடிநாதம் பிச்சைக்காரர்கள் பற்றிய காட்சிகளே. ஜெயமோகன் ...

இரவு அச்சம்

சமீபத்தில் மறைந்த என் தாத்தாவிற்கு பதினாறாம் நாள் திதி கொடுக்க நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். கோயில் வாசலிலிருந்த‌ பிச்சைக்காரர்கள் எங்களைப் பார்த்ததும் பெருங்குரலுலெடுத்து யாசிக்கத் தொடங்கினார்கள். நான் பேன்ட் பின்பாக்கெட்டை தடவுவதைப் பார்த்த என் மனைவி, திதி கொடுக்க வரும் போது இது போல் பிச்சை கேட்பவர்களுக்கு எதுவும் போடக்கூடாது என்று சொல்லி என்னைத்தடுத்தாள். நான் யோசித்து, " இதில் கல்யாணியும் சேர்த்தியா? " என்று கேட்க, கடுமையாக என்னை முறைத்தாள் என் தர்மபத்தினி. கல்யாணி என்பது கோயிலிலிருக்கும் பதின்மூன்று வயதுப் பெண் யானை.

படித்தது / பிடித்தது - 8

நட்புக்காலம் நன்றி : அறிவுமதி

மணலினூடே சில கிளிஞ்சல்கள் - 1

தங்க மழை பெய்ய வேண்டும் த‌மிழில் குயில் பாட வேண்டும் ( வைரமுத்து - திருடா திருடா ) மழையாய் பட்டானே கோடு கோடு கோடாய் வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய். ( பா.விஜய் - சக்கரகட்டி ) என் மனசெல்லாம் மார்கழி தான் என் கனவெல்லாம் கார்த்திகை தான். ( வைரமுத்து -‍ ஆய்த எழுத்து ) கடல் உப்பால உருவாச்சு உடல் த‌ப்பால உருவாச்சு ( பா.விஜய் ‍- பட்டியல் ) நீ ஒற்றை பார்வை பார்க்கும் போது என் முதுகுத்தண்டில் மின்னல் வெட்டும் ( வைரமுத்து -‍ ஆய்த எழுத்து )

G.K. - 3

PART V - CHAPTER I of Vatsyayana 's " KAMA SUTRA " says that the following are the women who are easily gained over: Women who stand at the doors of their houses. Women who are always looking out on the street. Women who sit conversing in their neighbour's house. A woman who is always staring at you. A female messenger. A woman who looks sideways at you. A woman whose husband has taken another wife without any just cause. A woman who hates her husband or is hated by him. A woman who has nobody to look after her, or keep her in check. A woman who has not had any children. A woman whose family or caste is not well known. A woman whose children are dead. A woman who is very fond of society. A woman who is apparently very affectionate with her husband. The wife of an actor. A widow. A poor woman. A woman fond of enjoyments. The wife of a man with many younger brothers. A vain woman. A woman whose husband is inferior to her in rank or abilities. A woman who is proud of he...

BEST OF FORWARDS - 24

Album : THE OPPOSITE SIDE OF THE SEA Track : Her Morning Elegance Directed by : Oren Lavie, Yuval and Merav Nathan Photography : Eyal Landesman Featuring : Shir Shomron

படித்தது / பிடித்தது - 7

எத்தனை பேர் நட்டகுழி எத்தனை பேர் தொட்டமுலை எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ் நித்தநித்தம் பொய்யடா பேசும் புவியில் மடமாதரை விட்டு உய்யடா உய்யடா உய். - பட்டினத்தார் நன்றி : பாலகுமாரன் மற்றும் சாரு நிவேதிதா பின்குறிப்பு : இந்தப்பாடல் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் முன்பு பாலகுமாரனின் இனியெல்லாம் சுகமே நாவலில் படித்தது (பதினைந்து வயது. இவ்வரிகளை அடிக்கோடிட்டு Superb என்று எழுதியிருக்கிறேன். அப்போது இது எந்த வகையில் பிடித்திருந்தது என சொல்லத்தெரியவில்லை). மீண்டும் நேற்று சாரு நிவேதிதாவின் கடவுளும் நானும் கட்டுரைத்தொகுதியில் இது படிக்கக்கிடைத்தது. நிஜமாகவே ஒரு கணம் ஸ்தம்பிக்கவைத்தது. இந்த லெளகீக வாழ்வின் அர்த்தமின்மையும் அதையொட்டிய நிலையாமையும் பற்றிய எண்ணம் ஆக்ரமித்து, ஒரு வித அவநம்பிக்கையும் ஆயாசமும் மனதில் சூழ்ந்து வதைத்தது. அப்போது ஊருக்குப்போயிருக்கும் என் மனைவி செல்பேசியில் அழைத்தாள். சத்தமில்லாமல் தினசரி வாழ்வின் அபத்தங்களுக்குத் திரும்பினேன். மற்றபடி பட்டினத்தாரின் சமாதியைப் போய்ப்பார்ப்பதிலும், பாபா படத்திலிருந்து விபூதி கொட்டிவதிலும் எனக்கு ஆர்வமில்லை.

போகாத ஊருக்கு...

கடந்த புத்தகக் கண்காட்சியில் நான் உயிர்மை அரங்கில் நின்று கொண்டு, சாரு நிவேதிதாவின் புதிய நூல்களை முழுவதும் வாங்கலாமா அல்லது பகுதி மட்டும் வாங்கலாமா என்று தீவிரமாய் யோசித்துக்கொண்டிருக்கையில், ஓர் எழுபது (அல்லது எண்பது) வயதுப்பெரியவர், என்னை கடைக்காரர் என நினைத்து " இந்திரா காந்தியின் சுயசரிதை இருக்கிறதா? " என்று விசாரித்தார். சற்றே கலவர‌மடைந்த நான், புத்தகங்களின் தொள்ளாயிரம் ரூபாய் சலுகை விலை பற்றிய கவலையை சில கணம் ஒத்திப்போட்டுவிட்டு, மிக பவ்யமாக‌ நிஜக்கடைக்காரரை கை காட்டிவிட்டேன் (அப்போது அரங்கில் மனுஷ்யபுத்திரன் இல்லை). அவர் அந்தப்பெரியவரிடம் வானதி, கிழக்கு, மணிமேகலை என சில பதிப்பகங்கள் பெயரைச்சொல்லி அனுப்பி வைத்தார். நான் கடையில் நின்று கொண்டிருக்கையில், உள்ளே வரும் ஒரு வாடிக்கையாளர் என்னைக் கடைக்காரர் என நினைத்து பேச ஆரம்பிப்பது எனக்கு புதிதல்ல. பலசரக்குக்கடை, ஜவுளிக்கடை, நகைக்கடை, செருப்புக்கடை என‌ பல இடங்களில் - ‍பெண்க‌ள் உள்ளாடைக்கடையில் கூட ஒருமுறை - இது போல் நடந்துள்ளது. நான் கலவர‌மடையக் காரணமே வேறு. இந்திரா காந்தி அம்மையார் சுயசரிதை எழுதியிருக்கிறாரா என்ன? கடைக்க...

SARKAR'S PHILOSOPHY - XXI

- Virginity - As a whole, it's an ass-hole. - First Night means the combination is new. - No girl allows to rape w/o her permission. - Shy to expose is her "yet another" weapon. - Sex is a conditionally recursive function. - Fucking a virgin is an age-old superstition.

உலகம் யாவையும்...

நிறுத்தத்தில் காத்திருப்பவர்கள் பேருந்து நேரத்தில் வர‌ கடவுளை பிரார்த்தித்துக்கொள்கிறார்கள். சர்க்கரை வியாதிக்காரர்கள் இனிப்புகள் உண்ணும் முன்பு கடவுளை பிரார்த்தித்துக்கொள்கிறார்கள். மலச்சிக்கல் உள்ளோர் கழிவறையில் அமர்ந்திருக்கையில் கடவுளை பிரார்த்தித்துக்கொள்கிறார்கள். கள்ளமாய்ப் புணர்வோர் கணவன் / மனைவி அறியாதிருக்க கடவுளை பிரார்த்தித்துக்கொள்கிறார்கள். புதிதாய்த் திருமணமான‌ பெண்கள் மாதவிலக்கு வ‌ராதிருக்க‌ கடவுளை பிரார்த்தித்துக்கொள்கிறார்கள். கன்னிப்பெண்களெனப்படுவோர் மாதவிலக்கு தவறாதிருக்க‌ கடவுளை பிரார்த்தித்துக்கொள்கிறார்கள். கடவுளை நினைத்தால் கொஞ்சம் பாவமாய்த்தான் இருக்கிறது.

விடைகள் தேவையில்லை - 1

1. தொழில்நுட்பம் படித்தவர்களால் விஜய் படங்களை எப்படி ரசிக்க முடிகிறது? 2. கமல்ஹாசனின் பேச்சு ஓர் ஆறறிவு மனிதனுக்கு எப்படி புரியாமல் போகிறது? 3. இறந்தர்வர்கள் உடலைப்பார்த்துக்கொண்டு எப்படி இரங்கற்பா பாட முடிகிறது? 4. அக்குள் / தொப்புள் தெரியும்படி பெண்கள் உடையணிவதன் அவசியமென்ன? 5. காதலில் இருப்பவரிடம் ஏன் எவ்வித‌ நியாய‌தர்க்கங்களும் எடுபடுவதில்லை?

I AM MAD

MAD , adj . Affected with a high degree of intellectual independence ; not conforming to standards of thought, speech and action derived by the conformants from study of themselves; at odds with the majority; in short, unusual. Courtesy : The Devil's Dictionary (1911) by Ambrose Bierce

BEST OF FORWARDS - 23

A Spanish Naval captain was walking leisurely on his battleship when a subordinate rushes over to him and says " Sir, an enemy battleship is fast approaching us. We should be ready ". The captain replies coolly " Go. Get my Red shirt. " The subordinate rushes over and gets the Shirt for his captain. The captain wears the red shirt. After some time, the enemy battleship comes in range. Consequently heavy rounds of fire are exchanged between the two battleships. After much effort, the Spanish win. The subordinate approaches his boss, " Congratulations for the victory sir, but why did you require the red shirt in the first place? " The captain replies " Because, during the war if I got injured then my blood should not have been seen as I did not want my men to lose hope and to fight with the same ferocity. " Just then another subordinate rushes over. " Sir, we just spotted another 20 enemy battleships heading in our direction. " The captai...