கடவுளின் பிழை
சமீபத்தில் வெளியான தனம் என்ற திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் "உலகம் கிடக்குது கிடக்குது, I don't care" என்றொரு பாடல் வருகிறது. அதில் பல்லவி முடிந்து முதல் சரணம் தொடங்குகிற இடைவெளியில் ஒரு இசை துக்கடா வருகிறது.
புதுபேட்டை திரைப்படத்தில் வரும் யுவன் ஷங்கர் ராஜாவால் Bangkok-இல் உள்ள Chapraya Symphony Orchestraவில் அமைக்கப்பெற்ற "Going thru emotions! : Prelude" என்கிற பின்னணி இசைக்கோர்வையின் ஆரம்பம் அப்படியே இப்பாடலில் பிரதியெடுக்கப்பட்டிக்கிறது.
கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் இரண்டுக்கும் வித்தியாசமே இல்லை. தமிழ் சினிமாவில் இசைத்திருட்டு என்பது அத்தனை புதிதான விஷயமில்லை. காலங்காலமாக பலரால் வார்க்கப்ப்ட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் எனக்குத்தெரிந்த வரை இளையராஜாவுக்கு இது புதிது.
அவரது சம்மதமின்றியோ அல்லது சம்மந்தமின்றியோ இது நிகழ்ந்துள்ளதாகவே நான் நம்ப விரும்புகிறேன்.

Comments