Posts

பெங்களூர் புக் ப்ரம்மா: ஜெயமோகன் உரை

Image
(ஆகஸ்ட் 9, 2024 - பெங்களூர் புக் பிரம்மா இலக்கிய நிகழ்வின் முதல் நாளில் ஜெயமோகன் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழ் வடிவம் (அவர் தளத்தில் தந்துள்ளபடி - https://www.jeyamohan.in/203929/ ) * அனைவருக்கும் வணக்கம். அமெரிக்காவில் ஒரு பேட்டியில் என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, எனக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்று. நான் இரண்டுமொழிகள் மிக நன்றாகத் தெரியும், ஆங்கிலத்தில் சமாளிப்பேன் என்று பதில் சொன்னேன். ஆச்சரியத்துடன் எவ்வாறு இரண்டுமொழிகள் தெரியும் என்று கேட்டனர். என் தாய்மொழி மலையாளம், எழுதும் மொழி தமிழ் என்று பதில் சொன்னேன். அது இன்னும் ஆச்சரியத்தை அளித்தது. ஆனால் நமக்கு இது வியப்பூட்டுவது அல்ல. தென்னகத்தின் யதார்த்தம் இது. இந்த அரங்கில் இருப்பவர்களிலேயே எம்.கோபாலகிருஷ்ணனின் தாய்மொழி கன்னடம். இன்னொரு எழுத்தாளரான சு.வேணுகோபாலின் தாய்மொழியும் கன்னடம். இங்கிருக்கும் எங்கள் பெருங்கவிஞரான சுகுமாரனின் தாய்மொழி மலையாளம். நெடுங்கால இடப்பெயர்வுளால் நம் ஒவ்வொரு பகுதியும் பன்மொழித்தன்மை கொண்டதாக ஆகிவிட்டிருக்கிறது. இதுவே தென்னகப் பண்பாடு. தென்னகத்திற்கென ஒரு தனிப்பண்பாடு உண்டு. நாம் ஒரு தனிப் பண்பாட்டுத்தே...

வீரனின் பாடல்கள்

Image
பெருமாள்முருகன் தமிழ் இலக்கியத்தின் சமீபப் பரபரப்பு. அனேகமாக எல்லாத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் அவர் மீது மெல்லிய பொறாமை உண்டு என்றுதான் சொல்வேன். ஆங்கில மொழிபெயர்ப்பு பெரும்பான்மை எழுத்தாளர்களின் ரகசியச் சொப்பனம். அவை கொணரும் உரிமப் பணமும் பெரும் புகழும் ஒரு பக்கம், அவை திறந்து விடும் பிரம்மாண்ட வாசல்கள் மறுபுறம் என வசீகரமான பக்க விளைவுகள் கொண்டவை. நேரடியாகச் சர்வதேசப் பதிப்பகங்கள் மூலம் நூல் வெளிவருதல் முதல் உலக இலக்கிய விழாக்களுக்கு அழைக்கப்படுதல் வரை இதன் சாத்தியங்கள் அளப்பரியவை. தமிழில் அவ்வேலை செம்மையாக நடந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் பெருமாள்முருகன். அதன் பலனாக‌ அவரது பெயர் தொடர்ச்சியாகப் பல்வேறு சர்வதேசிய விருதுகளின் இறுதிப் பட்டியல்களிலும் இந்திய அளவிலான பெரும் பரிசுகளிலும் இடம் பெறுகிறது. அதற்கு அவரது எழுத்துக்களின் தரம், தகுதி மட்டுமின்றி பதிப்பிக்கும் காலச்சுவடின் முன்னெடுப்புகளும் முக்கியக் காரணம். சமீப வெற்றி 25 லகரம் இந்திய ரூபாய்க‌ள் பரிசாகக் கொண்ட ஜேசிபி இலக்கிய‌ விருது - அனேகமாக இந்தியப் புத்தகங்களுக்கு அளிக்கப்படுகிற‌ பரிசுகளில் அதிகத் தொகை கொண்டது இதுதான். அவர் எழுத...

காலோஸ்மி [சிறுகதை]

Image
இக்கதை எழுதப்படும் நாளிலிருந்து * ஓராண்டு, ஒரு மாதம், 25 நாட்கள் எதிர்காலத்தில்… தீஸ் ஜனவரி மார்க்கிலிருந்த ‘காந்தி ஸ்மிருதி’ மாலை ஐந்து மணியின் குளிர்ச்சியில் சிலிர்த்திருந்தது. மஹாத்மா நினைவு நாள் என்பதையும் கடந்து ஜ‌னம் அதிகமில்லை. மரணத்தை நோக்கி காந்தி இறுதியாக நடந்து சென்ற பாதையை அடையாளப்படுத்த‌ அவரது பாத ரட்சைகளின் வடிவை சிமெண்ட்டில் புல்வெளி நடுவே பதித்திருந்தனர். அங்கே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் அருகருகே முகம் பார்த்துக் கைப் பிடித்தவாக்கில் நின்றிருக்க, மற்றொரு பெண்மணி சற்று விலகி நின்று அவர்களைப் பார்த்திருந்தார். த‌ன் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஐஸ்க்ரீமைக் கண்ட குழந்தை கணக்காக தாராவின் கண்களில் வழியும் காதல் ஈஸ்வரனுக்குப் பிடித்தமானது, பெருமிதமானது. தனது அத்தனை வெற்றிகளையும் பிடித்த‌ பெண்ணின் பாதத்தில் சமர்ப்பித்து அவளது காதலை வென்றெடுப்பதையே ஓர் ஆண் ஆகச் சிறந்த பெருமையாகக் கருதுகிறான்! முலைகள் அழுந்தும் கூச்சமின்றி ஈஸ்வரனைக் கட்டி அணைத்துக் கொண்டாள் தாரா. அவன் பக்கல் கொழுப்பு செழித்த அவளது கன்னத்தில் மென்முத்தமிட்டுச் சொன்னான் - “பயப்படாதே! பத்திரமாப் போயிட்டு வா.” தாரா த...

எழுத்தாளன் அரசியல் பேசலாமா?

ஓர் எழுத்தாளனின் அரசியல் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து தமிழ்ச் சூழலில் எப்போதும் கலவையான கருத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன. அவன் சமகால‌ அரசியலை நேரடியாகப் பேச வேண்டும் என்பது முதல் அரசியல் குறித்து ஏதும் பேசவே கூடாது என்பது வரை அவற்றிடையே பார தூர வித்தியாசங்கள் இருக்கின்றன‌. இவற்றுக்கு உதாரணமாக உள்ள‌ எழுத்தாளர்களைப் பார்க்கிறோம். மனுஷ்ய புத்திரன், இமையம், சு. வெங்கடேசன், தமிழச்சி, கனிமொழி போன்றோர் கட்சி உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கண்மணி குணசேகரன், ஜோ டி க்ரூஸ் போன்றோர் கட்சி உறுப்பினர் இல்லை என்றாலும் தீவிரமான சார்பெடுத்து அரசியல் பேசுகிறார்க‌ள். ஜெயமோகன் மீதும் அரசியல் சார்புள்ளவர் என்ற பார்வை இருக்கிறது. ஆனால் அவர் கிட்டத்தட்ட எல்லாத் தரப்பையும் கடுமையாக எதிர்த்தும் கொஞ்சம் ஆதரித்தும் எழுதியிருக்கிறார். சாரு நிவேதிதா எல்லோரும் வியக்கும் வண்ணம் எப்போதாவது எதையாவது எதிர்த்தோ ஆதரித்தோ எழுதுவார். பெருமாள் முருகன் முற்போக்கு தரப்பு. எஸ். ராமகிருஷ்ணனோ, யுவன் சந்திரசேகரோ என்ன அரசியல் தரப்பென எவருக்கும் தெரியாது. அக்காலத்தில் ஜெயகாந்தன் வெளிப்படையான அரசியல் சார்பு...

கல்லளை [சிறுகதை]

Image
(Disclaimer: இக்கதை நெடிய மானுட வரலாற்றில் எங்கேனும், எப்போதேனும் நட‌ந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் எழுத்தாளச் சுதந்திரத்துடன் முழுக்கக் கற்பனைப் புனைவாகவே நான் இதை முன்வைக்கிறேன். வாசகர்களையும் அவ்வாறே அணுகக் கோருகிறேன்.) “மிஸஸ். மிஷ்ரா, எல்லாம் நார்மல். இன்றிலிருந்து பன்னிரண்டாம் நாளில் பிரசவம்!” மல்லாக்கப் படுத்திருந்த அஹிம்ஸாவின் அகட்டிய கால்களுக்கு இடையிலிருந்து தன் வலது கரத்தை வெளியே எடுத்து கையுறையைக் கழற்றியபடி மருத்துவ‌ர் சொன்னாள். அஹிம்ஸா புன்னகை செய்தாள். அவள் கொஞ்சம் கவலைகளுடன்தான் வந்திருந்தாள். சில நாட்களாக முதுகு வலி இருக்கிறது. வீங்கித் தொங்கும் வயிற்றின் அடியில் அழுத்தம் அதிகரித்திருக்கிறது. அந்தப் புகார்களை எல்லாம் சொன்ன போது மருத்துவர் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக் கொண்டாள். அது அவளது பாஷை - ஒன்றும் பிரச்சனை இல்லை, அவை இயல்பான அறிகுறிகள் என்று அதற்கு அர்த்தம். அவள் சற்று நெற்றி சுருக்கினால் வழமையிலிருந்து விலகி இருக்கிறது, ஆனாலும் சரி சீர் படுத்திடலாம் என்று அர்த்தம். அசலாகவே பிரச்சனை எனில் வாய் திறப்பாள். சிக்கலும் தீர்வும் சுருங்கச் சொல்வாள். மருத்துவரிடம் வந்து செல்லு...